Skip to main content

"துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் பதிலடி"- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

"Governor R. N. Ravi's speech to respond with guns to those who pick up guns"!

 

கேரள மாநிலம், கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "துப்பாக்கியைப் பயன்படுத்துவோரை, துப்பாக்கியால்தான் கையாள வேண்டும்; வன்முறையை ஏற்க முடியாது. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசும் எவருடனும் பேச்சுவார்த்தையே இல்லை. 

 

ஆயுத குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும். மும்பை தாக்குதலுக்கு பிறகு அப்போதைய இந்திய பிரதமர் பாகிஸ்தானுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இரு நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி இந்தியா- பாகிஸ்தான் கையெழுத்திட்டது. 

 

பாகிஸ்தான் நட்பு நாடா? அல்லது எதிரி நாடா என்பதில் தெளிவே இல்லாமல் ஒரு ஒப்பந்தமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்