Skip to main content

பாஜக நிர்வாகியின் வீடு இடிப்பு; போலீசார் குவிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
 Demolition of BJP executive's house; Police build up

புதுச்சேரியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பாஜக பிரமுகர் கட்டிய வீட்டை அரசு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு தகர்த்தெறிந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் சேதுராம்பட்டு கரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பாஜகவின் முக்கிய நிர்வாகியாக உள்ளார். கடந்த 2006-2007 ஆம் ஆண்டு ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக இருந்தபோது சேதுராம்பட்டு கரசூர் கிராமப் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்காக 249 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் சதுப்பு நிலங்கள் அங்கு கையகப்படுத்தப்பட்டு இருந்தது. மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கரசூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி செல்வராஜ் அரசு கையகப்படுத்திய தனது நிலத்திற்கான பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவருக்கு சேர வேண்டிய நிலத்தின் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. தனக்கு வீடு கட்டி குடியேற இடம் இல்லாததால் கடந்த ஆண்டு அங்கேயே வீடு கட்டி வந்தார். கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் இது அரசு நிலம் அதனால் இங்கு வீடு கட்ட கூடாது என நோட்டீஸ் ஓட்டினர். இதனையடுத்து, தனக்கு வேறு இடத்தில் நிலம் இல்லாததால் இங்கு மட்டும்தான் வீடு கட்ட முடியும் எனப் பதிலளித்து செல்வராஜ் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வில்லியனூர் சப் கலெக்டர் தலைமையில் போலீசார் மற்றும்  நில அளவைத் துறை ஊழியர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் 4 ஜேசிபி இயந்திரங்களுடன் வந்து செல்வராஜ் கட்டி வரும் வீட்டை இடித்து அகற்றினர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போலீசார் அதிகம் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்