Skip to main content

ராணுவத்துக்கு ஆறு மாசம்! ஆர்.எஸ்.எஸ்.க்கு மூணே நாள்! - மோகன் பாகவத்

Published on 12/02/2018 | Edited on 20/02/2019

போர் வந்தால் இந்திய ராணுவத்துக்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ். தயாராகி விடும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

 

Mohan

 

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘இந்தியா ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் பட்சத்தில், அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுத்தால், ஆர்.எஸ்.எஸ். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும். இந்திய ராணுவம் போருக்குத் தயாராக ஆறேழு மாதங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ராணுவமாக ஒன்றுகூட மூன்றே நாட்கள் போதும்’ என பேசியுள்ளார்.

 

மேலும், ‘ஆர்.எஸ்.எஸ். ஒரு குடும்ப அமைப்பாக செயல்பட்டாலும், ராணுவத்திற்கு இணையான ஒழுக்கத்துடனும், ஆயத்த நிலையுடனும் இருக்கிறது. தேசம் பிரச்சனையைச் சந்திக்கும்போது உயிரையும் விடுவதற்கு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். இந்தியா இந்து தேசமாகும்போது அதில் ஆர்.எஸ்.எஸ்.க்கான தேவை இருக்காது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஒவ்வொருடனும் நண்பர்களாக அப்போது பழகிக் கொண்டிருப்பார்கள்’ என பேசியுள்ளார்.

 

மோகன் பாகவத்தின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மிருத்யுன்ஜே திவாரி, ‘இந்திய ராணுவம் அதன் ஒப்பற்ற தியாகங்களால் மிகப்பெரிய பெருமைகளைக் கொண்ட நிறுவனம். அதோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்