ADVERTISEMENT

அடிக்கடி என்னுடைய போட்டோவை கேட்பார்... போலீஸ் மீது இளம்பெண் கூறிய அதிர்ச்சி புகார்!

10:20 AM Nov 04, 2019 | Anonymous (not verified)

தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணுக்கு, காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சினிமா வில்லன் பாணியில் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ, இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

விசாரணையில் இறங்கினோம். நாகை மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக இருப்பவர் விவேக் ரவிராஜ். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஊரான ஓரடியாம்பல்லத்தைச் சேர்ந்த அவர் 2017-ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு காவல் நிலையத்தில்தான் முதன்முதலில் உதவி ஆய்வாளராகச் சேர்ந்தார். அப்போது சுபஸ்ரீ என்கிற இளம்பெண், அவருக்கு முகநூல் மூலம் நட்பாக, அடுத்தடுத்து எல்லாம் நடக்க ஆரம்பித்தது. இந்த நிலையில்தான்... அந்த சுபஸ்ரீக்கு விவேக் ரவிராஜ், கடுமையாக மிரட்டல் விடும் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT



இது குறித்து விபரம் அறிய அந்த சுபஸ்ரீயைத் தேடிப்பிடித்தோம். அப்போது அவர்...

"விவேக்கோடு முகநூல் நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாகப் பழகினோம். பிறகு என்னுடைய செல்நம்பர் கேட்டார். அதன்பிறகு வீடியோக்களில் பேசிக்கொண்டிருதோம்; அடிக்கடி என்னுடைய போட்டோவை கேட்பார், அவரோட போட்டோக்களை விதவிதமா அனுப்புவார். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசிக் கொண்டோம். எங்களின் முதல் சந்திப்பு வைத்தீஸ்வரன் கோயில்லதான் நடந்தது. இதற்கிடையே அவரை வேட்டைக்காரனிருப்புக்கு மாற்றினாங்க. அப்போ என்னை வரச்சொன்னார். அவருக்கு வாட்ச் வாங்கிகொண்டு இரவு 8 மணியிருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் வந்து போன் போட்டேன். இரவு 11 மணிக்கு வந்தார். இரவு 12 மணிக்கு மணல்மேடு கல்லூரிக்கு எதிர்ப்புறம் உள்ள அவரது வாடகை வீட்டிற்கு கூட்டிட்டு போனார். அன்று என்னிடம் எல்லைமீறி நடந்து கொண்டார். திரு மணம் செய்துகொள்வதாகக் கூறியதால் உடன்பட்டேன்.

இதனால் கர்ப்பமானேன். இது தெரிஞ்சதும், "வீட்டிலோ, வேறு யாரிடமும் இதைச் சொல்லவேண்டாம். வெளியில் தெரிந்தால் போலீஸ் வட்டாரத்தில் எனக்கு பெருத்த அவமானம் உண்டாகும். இப்போதைக்கு கருக்கலைப்பு செய்து கொள். ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துக்கலாம்'னு கெஞ்சியதோடு, அவருடைய நண்பர் ஹரிஹரன் என்பவர் சென்னையில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். நான் கருக்கலைப்புக்கு உடன்படவில்லை. "பெற்றோருடன் வந்து எங்க வீட்டுல பேசுங்க'ன்னு சொன்னேன். பிறகு தன் தாயாருடன் ஒருநாள் இரவு 9 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் பேசினார். "மூன்று மாதத்தில் திருமணம் செய்கிறேன்' என்று கருக்கலைப்புக்கு சம்மதிக்க வைத்தார். காரியம் முடிந்ததும் என்னிடம் பேசுவதையே நிறுத்தியதோடு, என்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் முகத்தில் அடித்தது போல் பேசத்துவங்கி விட்டார். "இனி நீ கால்செய்து பேசினால், உன் ஊரில் நீ தவறானவள் என்று போஸ்டர் ஒட்ட வைத்துவிடுவேன்' என்று மிரட்டினார்.

ADVERTISEMENT


வேட்டைக்காரனிருப்பில் இருந்து தஞ்சை மாவட்டம் மதுக்கூருக்கு மாறிப் போனார், அங்கேயும் தேடிப்போனேன். அங்க அவரோட அம்மா முன்பாகவே என்னை அடித்ததோடு ஆபாசமாகத் திட்டினார். அதனால் நீதிகேட்டு அன்று தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் படி ஏற ஆரம்பிச்ச நான், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., மயிலாடுதுறை டி.எஸ்.பி. அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், நாகை எஸ்.பி., ஏடி.எஸ்.பி. என ஏறாத காவல்துறை அலுவலகமே இல்லை; கொடுக்காத ஆதாரங் களே இல்லை. ஆனாலும் காவல்துறையில் நடவடிக்கை இல்லை'' என்று தேம்பியவர்...

மீண்டும் தொடர்ந்தார்...

"ஒருமுறை நாகை முன்னாள் எஸ்.பி.விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலை யத்தை விசாரிக்கச் சொன்னார். அங்க நான் போயிருந்தேன். விவேக் வரல, நான்கு நாள் கழித்து சென்னை வந்தவர், "கேசை வாபஸ் வாங்கு; இல்லன்னா எத்தனை தலை விழும்னு தெரியாது. என்னோட போலீஸ் புத்திய காட்டவேண்டி வரும்'னார். அதுக்கும் நான் பயப்படல. பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தூண்டுதலின் பேரில் மயிலாடுதுறையை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் வந்து என்னிடம் பேரம் பேசினாங்க. நான் மறுத்துட்டேன். அவர் முகத்திரையக் கிழிக்கணும்னு தான் உங்ககிட்ட பேசுறேன்'' என முழுக்கதையையும் சொல்லி முடித்தார்.

எஸ்.ஐ. விவேக் ரவி ராஜை சந்திக்க, திட்டச் சேரி காவல் நிலையத்திற்கு சென்றோம். அவர் வெளியில் சென்றிருப்பதாகக் கூறி செல் போன் நம்பரை கொடுத்தனர். அதில் அழைத்தோம். அவர் எடுக்கவில்லை.


காவல்துறை வட்டாரத் தில் விசாரித்தபோது, "வேலையில் சேர்ந்த புதுசுல ஸ்பீடா இருந்தார். யார் கேட்டாலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெயரைச் சொல்லி மிரட்டுவார். ஒருமுறை பட்டவர்த்தி அருகே உள்ள சாராய வியாபாரி ஒருவனை கைது செய்து சிறைக்கு அனுப்பிட்டு அவ னோட பொண்டாட்டிக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்து அங்க நைட் டூட்டியிலேயே போனார். அக்கம் பக்கத்தினர் விரட்டி அடிச்சிருக்காங்க. அதே மாதிரி மணல் கொள்ளையர் களிடம் தனி நெட்வொர்க்கே வைத்துக்கொண்டு அமைச்சர் பெயரைச் சொல்லி சம்பாதிச் சார். அந்த விவகாரத்தில் ஒரு கொலை நடந்தது. அதில்தான் மாற்றலானார்; சப்-இன்ஸ்பெக் டர் விவேக்கும், சுபஸ்ரீயும் வன்னியர் சமூகம்தான். அந்தப் பொண்ணோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கர்ப்பமாக்கியது தப்புதானே?'' என்கிறார்கள். இந்த விவகாரத்தில் உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுத்துக் காவல்துறையின் மாண்பை நிலைநாட்ட வேண்டும்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT