ADVERTISEMENT

சொன்னதை செய்துவிட்டோம்... ஓட்டு போடுங்க... யூடியூபில் ஓட்டுகேக்கும் பாஜக

09:10 PM Apr 11, 2019 | kalaimohan

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜகவின் யூ-ட்யூப் சேனலில் ஒரு ராப் பாடல் ஒன்று முதல் முறை வாக்கு செலுத்த இருக்கும் இளைஞர்களை கவரும் விதமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ விளம்பரங்களாகவும் வந்துகொண்டிருக்கிறது. இந்த பொதுத் தேர்தலில் 18-19 வயதுடைய முதல் முறை வாக்கு செலுத்த இருக்கும் இளைஞர்கள் 1.5 கோடி பேர் உள்ளனர். என்பதால் அனைத்து கட்சிகளும் முதல் முறை வாக்கு செலுத்தும் இளைஞர்களை குறி வைக்கிறது. மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதலாக பாஜக இளைஞர்களை கவர இந்த வீடியோ மூலம் முயற்சி செய்துள்ளது என்றே சொல்லலாம். 1.5 கோடி இளைஞர்கள் வாக்குகள் என்றால் 1.6 சதவீதம் வாக்குகள் நாடு முழுவதும் உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மூன்று நிமிடம் இருக்கும் அந்த வீடியோவில் முழுவதும் ஆண்கள், பெண்கள் என இளைஞர் பட்டாளமாக துள்ளி குதிக்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பிடுவதற்காக பஞ்சாபி, வட கிழக்கு பெண், வட இந்திய, தென் இந்திய இளைஞர்கள் போல் தோற்றம் உடைய இளைஞர்கள் ஆடுகின்றனர். அனைவருக்கும் பிடிக்கின்ற மாதிரியான இசை, பரதநாட்டியம், ஹிப்ஹாப், யோகா என்று இந்திய நடனம், மேற்கத்திய நடனம் என இரு நடனங்களையும் கலந்துகட்டி அடித்திருக்கிறது இந்த விளம்பர பாடல். கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும் விஷுவல்ஸ், கேமரா தொழில்நுட்பத்திலிருந்து, வீடியோ தொகுப்பு என்று தொழில்நுட்ப ரீதியாக இந்த வீடியோவுக்கு சினிமா அளவிற்கு மெனக்கெடல் கொடுத்திருக்கிறார்கள். பாடல்கள் முழுக்க ராப் இசையில், நல்ல பீட்கள் அமைந்திருப்பதால் அனைவரையிலும் எளிதில் கேட்க வைத்துவிடுகிறார்கள்.

பாஜக இதில் எங்கு ஓட்டு கேட்கிறார்கள் என்றால் முழுக்க முழுக்க பாடலில் வரும் வரிகள்தான். இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட வேட்பாளர் வேண்டும் என்று வீடியோவை தொடங்கி, மக்கள் அனைவருக்கும் பிடித்தவர்தான் வேண்டும் பதிலளித்து அப்படியே வீடியோவில் ராப் பாடல் வழியாகவே இளைஞர்களிடம் தங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று பாஜக கேட்கிறது. ஆளுங்கட்சியான பாஜகவைதான் வருகிற பொதுத் தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, எதற்காக வாக்கு செலுத்த வேண்டும் என்பது போல அவர்களே சொல்கிறார்கள். வீட்டு கடன், விவசாயத்திற்கு புது திட்டம், சோலார் பவர், ஊழல் ஒழிப்பு, புல்லட் ட்ரெயின் என்று பல திட்டங்கள் இவர்கள் கொண்டுவந்துள்ளதாகவும். நாட்டிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இவர்கள் தீர்வு கொண்டுவந்துவிட்டார்கள் ‘டன்’,‘டன்’ என செம மெட்டில் பாடல் அமைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்டப் இந்தியா, மேக் இன் இந்தியா, கிளீன் இந்தியா என்று ஆளுங்கட்சியின் திட்டங்களையும் குறிப்பிடுகிறார்கள். 120 ரூபாய்க்குள் ஒரு ஜிபி நெட் கிடைக்கிறது என்று இளைஞர்களை கவர்கிறார்கள்.

வீடியோவில் சில யுக்திகளையும் பயன்படுத்துகிறார்கள். பரதநாட்டியம் ஆடும் பெண், கையில் தாமரை மலர்வது போன்று செய்கை செய்வார். அதனை அடுத்து அவர் சந்தோசமாக இருப்பதுபோல செய்கை செய்வார். இந்த மாதிரி சினி யுக்திகளை கையாண்டுள்ளனர். எனக்காக அனைத்தையும் செய்தவருக்குதான் என்னுடைய முதல் ஓட்டு என்று ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இசையும், காட்சியும் அனைவரது மனதையும் கவர்ந்தாலும் பாஜக வின் இந்த விளம்பர பாடலை பாஜக கட்டமைத்த ஸ்மார்ட் சிட்டியில் புல்லெட் ரயிலில் பயணம் செய்துகொண்டு பார்ப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் இந்த தேர்தலை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும் என்பது நிதர்சனம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT