ADVERTISEMENT

கட்சியினரின் உள்ளடி வேலை! துரோகிகளை களையெடுங்கள்! திமுக விசுவாசிகள் குரல்!

12:28 PM Jun 30, 2021 | rajavel

ADVERTISEMENT

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் ஒரு பங்கு இடத்தினை எதிர்க்கட்சிகள் பிடித்துள்ளன. அதிலும் தி.மு.க 173 தொகுதிகளில் போட்டியிட்டு 125 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் 49 இடங்களில் தோல்வி என்பதை தி.மு.க.வினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோல்வியடைந்த தொகுதிகளில் ஏன் தோல்வி என்பதை கட்சி தலைமை தீவிரமாக விசாரணை நடத்தவேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற குரல்கள் தி.மு.க.வினரிடம் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

"கொங்கு மண்டலம் எனப்படும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 68 தொகுதிகள் உள்ளன. இதில் 44 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் சில தொகுதிகளில் இந்தமுறை தி.மு.க தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் சாதி வாக்குகள் மட்டுமல்ல சொந்தக் கட்சியினரின் உள்ளடி வேலையும் பின்னணியில் இருக்கிறது. அதனால் இதில் தலைமை தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். தவறு செய்த நிர்வாகிகள், செயல்படாத நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்காக 46 தனித்தொகுதிகள் உள்ளன. இந்த தனித்தொகுதிகளில் எப்போதும் அ.தி.மு.க தனிக்கவனம் எடுத்து செயல்படுகின்றது என தேர்தலுக்கு முன்பே நக்கீரன் எச்சரித்தது. எச்சரிக்கைக்குப் பின்பும் தி.மு.க. பெரியளவில் கவனத்தை செலுத்தவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 46 தனித்தொகுதிகளில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதியிருந்த 27 இடங்களில் நேரடியாக போட்டியிட்டோம். அ.தி.மு.க, கூட்டணி கட்சிகளுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதி யிருந்த 38 இடங்களில் அதுவே போட்டியிட் டது. தேர்தல் முடிவில் தனி தொகுதிகளில் மட்டும் தி.மு.க. கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் அ.தி.மு.க மட்டும் 17 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

2011-ல் 46 தனி தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 2016-ல் அ.தி.மு.க 32 இடங்களிலும், தி.மு.க 14 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும்போது தனித்தொகுதி களில் தி.மு.கவின் வெற்றி பெரியது தான். அதேநேரத்தில் தி.மு.க சுலபமாக வெற்றி பெறவேண்டிய தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பே குறிப்பிட்டதுபோல் வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்து தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது கே.வி.குப்பம், அரூர், திண்டிவனம் போன்ற தொகுதிகளில் உட்கட்சி பிரச்சனையும், வேட்பாளர் தேர்வுமே குளறுபடி'' என்கிறார்கள் தி.மு.க பிரமுகர்கள்.

"கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை, சேலம் மாவட்டங்களில் படுதோல்வி யடைந்தது ஏன் என்கிற கேள்வியோடு எம்.பியும், கழக சட்டத்துறை செயலாளருமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒரு குழுவை அமைத்து நேரடியாக கள விசாரணைக்கு அனுப்பியுள்ளார் தி.மு.க தலைவரான முதல்வர் ஸ்டாலின். அந்த டீமும் உன்னிப்பாக அனைத்தையும் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்ற மாவட் டங்களில் தோல்வியடைந்த தொகுதிகளில் ஏன் தோல்வி என்பதை விசாரணை நடத்த வேண்டும். தி.மு.க போட்டியிட்ட ஆரணி, போளூர், கே.வி.குப்பம், திண்டிவனம், மயிலம், கிருஷ்ணகிரி, பென்னாகரம் போன்ற தொகுதிகளும் அரக்கோணம், வாணியம்பாடி போன்ற கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் தி.மு.க பலமாகவுள்ள தொகுதிகள். இங்கெல்லாம் தி.மு.க தோல்வியடைய காரணம், கட்சியில் உள்ள துரோகிகள் தான். அந்த துரோகிகள் யார் என்பது வேட்பாளர்களுக்கு, கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் விசாரித்து துரோகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2018-ல் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வரை அறிவாலயத்துக்கு அழைத்து நேரடியாக சந்தித்து தங்கள் பகுதியில் கட்சியில் உள்ள பிரச்சனைகளை கேட்டார். புகார் பெட்டி வைத்து தொண்டர்களின் மனநிலையை அறிந்தார் தலைவர் ஸ்டாலின். அந்த புகார்களை தலைமை கழக நிர்வாகிகளை வைத்து ரகசிய விசாரணை நடத்தி, தவறு செய்த நிர்வாகிகளை கட்சி பதவிகளில் இருந்து மாற்றம் செய்து டம்மியாக்கினார். அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டது. அதேபோல் இப்போதும் நடக்காமல், தவறு செய்த நிர்வாகிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், ஆட்சிக்கு வந்துவிட்டால் கட்சி வளர்ந்துவிடாது. தொய்வான பகுதியில் கட்சியை வளர்க்க தீவிரமாக முயற்சி செய்யவேண்டும். அதற்கு முதலில் துரோகிகளை களையெடுக்க வேண்டும். சாதி, மதங்களை கடந்து மண் மீது, மொழி மீது, கட்சி மீது, மக்கள் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இயக்கத்துக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் கட்சி இன்னும் வலிமையடையும்'' என்கிறார்கள்.

மக்களின் நலன் காக்கும் முதல்வர் கட்சித் தொண்டர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்வாரா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT