Advertisment

அண்ணல் அம்பேத்கர் 133வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிற்போக்குத்தனங்களில் மூழ்கியிருந்த இந்தச் சமூகத்தில் அறிவொளி ஏற்றிட்ட புத்துலகப் புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் இலட்சியங்களை நெஞ்சிலேந்தி, சமத்துவநாள் உறுதிமொழியேற்று போற்றினேன். சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல்! மானுடத்தின் பொருள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment