ADVERTISEMENT

அன்று 3 கோடியில் தங்கத்தோடு, வைர ப்ரேஸ்லட்... இன்று??? விஜய் மல்லையாவின் இன்றைய நிலை என்ன??

12:49 PM Dec 13, 2018 | kamalkumar

ADVERTISEMENT

விஜய் மல்லையா கிங்ஃபிஷர் நிறுவனத்தின் அதிபர். செல்வந்தர், ஜொலிக்கும் ப்ளேபாய் இப்படியாகதான் நமக்கு தெரியும். 2016க்கு பிறகு அவர் வெளிநாட்டில் தஞ்சமடைந்த ஒரு கடனாளியாக தெரியும். விஜய் மல்லையாவை லண்டனிலிருந்து நாடுகடத்துவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. ஏற்கனவே அவரது சொத்துகள் அனைத்தும் நீதிமன்றத்தின் வசம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தனது நிறுவனத்திற்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் அவர் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டித்தொகை ஆகியவற்றின் மதிப்பு ரூ. 9000 கோடி, அவர் நாட்டைவிட்டு போனது, நாடுகடத்த உத்தரவிட்டது. இப்படி எல்லாமே அதற்காகதான்.


ஆடம்பரத்தை அதிகம் விரும்பும் மல்லையா 10 இலட்சம் மதிப்புள்ள 2 தங்க நெக்லஸ், 3 கோடிக்குமேல் மதிப்புள்ள தங்கத்தோடு, வைர ப்ரேஸ்லட்டும், தினசரி பயன்பாட்டிற்காக 70 இலட்சம் மதிப்புள்ள 9 ஆடம்பர வாட்ச், பச்சை மரகதக்கல் பதித்த மோதிரம், வைரக்கல் பதித்த மோதிரம் இவற்றின் மதிப்பு மட்டும் கிட்டதட்ட 5.4 கோடி. மேலும் 9 கோடி மதிப்புள்ள 2 செவ்வந்திக்கல். ரொல்ஸ் ராய்ஸ் பென்டோம், மினி ஜான் கூப்பர், ரேஞ்ச் ரோவர், பென்ட்லே டர்போ, 3 ஃபெராரி, இவற்றின் மதிப்பு மட்டும் 16 கோடி. 3 சொகுசு கப்பல்கள் இவற்றின் மதிப்பு மட்டும் 30 கோடி. இவையெல்லாம் அவரது சொத்துகளில் சிலவைதான். இவைகளில் பல அவரின் அன்றாட பயன்பாடுகளில் உட்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.


நேற்று விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் கடன் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் மல்லையாவிடம் இருந்த சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவரிடம் இருந்த வாட்ச், ப்ரேஸ்லெட், மோதிரங்கள் உள்ளிட்ட நகைகள், சொகுசு கார்கள் என அனைத்துமே நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, என குறிப்பிட்டிருந்தார். வைர ப்ரேஸ்லெட் உட்பட 7 நகைகள், 9 வாட்ச், 9 சொகுசு கார்கள், சொகுசு கப்பல்கள், 12 கத்தி, 2 கேடயம், கவச உடையுடன் கூடிய சிலை ஆகியவையும் அடங்கும். என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT