ADVERTISEMENT

ராஜீவ் காந்தி உதயநிதி படத்தை பாக்கெட்டில் வைத்து சுத்த வேண்டி வரும்... அதை நினைத்தால்தான்... - சீமான் கிண்டல்

10:46 AM Jan 29, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற தைப்பூச விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, "இந்த தைப்பூச நாளில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் சேர்ந்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். அதைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நம்முடைய தம்பிகள் அவர்கள். அவர்கள் விருப்பம் எதுவோ அதைச் செய்யட்டும். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான்தான் அவர்களை அங்கே அனுப்பி வைத்துள்ளேன். ஒருவரை அங்கேயும், ஒருவரை இங்கேயும் அனுப்பி வைத்துள்ளேன். அங்கிருந்து எனக்கு வேலை செய்யுங்கள் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளேன். திராவிடம், தமிழ் தேசியத்துக்குத் தாய் என்று அவர்கள் கூறியதாக என்னிடம் கேட்கிறீர்கள். அதை ஏற்க முடியாது. திராவிடம் என்பது கற்பிதம். அது வேறு பொருளை தர வல்லது. எனவே தமிழ்தேசியத்தோடு இரண்டையும் முடிச்சு போடுவது தவறு. இந்தியம் எப்படி உருவாக்கப்பட்டதோ அதைபோல திராவிடம் என்பதும் உருவாக்கமே. இங்கே இருப்பது தமிழ் தேசம். எனவே தமிழ்த் தேசிய அரசியல் என்பதே இங்கே சாத்தியப்படும்.

தமிழில் இருந்து பிரிந்தததுதான் மற்ற மொழிகள். எனவே கன்னடம், மலையாளம், தெலுங்கு முதலியன தமிழ் மொழியில் இருந்து பிரிந்த மற்ற மொழிகள்தான். எனவே மற்ற மொழிகளின் முன்னோடியாக இன்று வரை தமிழ் இருந்து வருகிறது. மொழிக் கலப்பில் பிறந்த மொழிகள்தான் அவை. தமிழ் மென்று உமிழ்ந்த மொழிகளாக அவை இருந்து வருகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளமே கிடையாது. அங்கே இருக்கிற தலைவர்களே அதை ஒத்துக்கொள்கிறார்கள். மலையாளத்தில் இருந்து சமஸ்கிருதத்தைப் பிரித்தெடுத்தால் அது தூய தமிழாக எதிரொலிக்கும் என்று அவர்களே நம்மிடம் சொல்லி வருகிறார்கள். எனவே அனைத்து மொழிகளுக்கு தமிழ் தாய் மொழியாக இருந்து வருகிறது. உலக மொழிகளின் தாயாக தமிழ் இருந்து வருகிறது. தமிழர்கள் நாங்கள் மற்ற மொழிகளாக பிரிந்து கிடக்கிறோம். அதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். தமிழர்கள் இவ்வாறு பிரிந்து கிடப்பதால் பலர் நம்மை ஏளனமாகப் பார்க்கிறார்கள். அதற்கெல்லாம் இனி நாம் அஞ்சப்போவதில்லை. நம் மொழியை நாம் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இது தமிழர் நாகரிகம், அப்புறம் எப்படி இதை திராவிட நாகரிகம் என்று கூறுகிறோம். பைத்தியக்காரத்தனமாக சிலர் அவ்வாறு கூறிவருகிறார்கள். அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் கட்சியில் இருந்து மற்ற திராவிட கட்சிக்குப் போகிறவர்கள் அங்கே சென்று திராவிடத்தைப் பேசித்தான் ஆக வேண்டும். அதை தற்போது அவர்கள் செய்து வருகிறார்கள். அதில் பெரிய ஆச்சரியம் இல்லை. இருக்கும் இடத்தில் அவர்கள் அதற்கு தகுந்தார்போல் அவர்கள் ஆடுகிறார்கள். இங்கே அவர்கள் போன பிறகு அவர்களுக்கு உரிய பாட்டை பாடித்தானே ஆக வேண்டும். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும். ஸ்டாலின் படத்தையும், உதயநிதி படத்தையும் அவர்கள் சட்டை பையில் வைத்துக்கொண்டு சுற்றுவதை நாம் பார்க்க வேண்டுமே என்பதுதான் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் கட்சி தொடங்கி பத்து ஆண்டுகள் ஆகிறது. இன்றைக்கு பாஜக வேல் எடுத்து சுத்துகிறது. இதையெல்லாம் யாரை ஏமாற்ற செய்கிறார்கள் என்று தெரியவில்லை. முருகன் மீது இவ்வளவு பாசம் இருப்பவர்கள் இத்தனை ஆண்டுகள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT