ADVERTISEMENT

"கரோனா வைரஸை விட கொடுமையானவர்களிடம் நாடு உள்ளது.." - சீமான் பேச்சு!

12:34 PM Mar 12, 2020 | suthakar@nakkh…

தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறை நடந்துள்ளது. ஆனால் அது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அல்லது பிரதமர் மோடியோ ஒரு சிறிய வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இதை எல்லாம் பார்க்கின்ற போது வேதனையாக இருக்கின்றது. இந்த கொடுமையானவர்கள் நிறைந்துள்ள தேசத்திலா நாம் வாழ்கிறோம் என்ற அச்ச உணர்வு இயல்பாகவே நமக்கு ஏற்படுகின்றது. கரோனா வைரஸை விட கொடுமையானவர்களிடம் நாடு மாட்டிக்கொள்ளது. இப்போது புதிதாக வங்கி திவாலாகும் சீசன் ஆரம்பித்துள்ளது. பஞ்சாப் வங்கியை முடித்துவிட்டு தற்போது எஸ் பேங்கை முடித்துள்ளார்கள். வங்கிகள் ஏன் திவாலாகின்றது. எதற்காக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். பொதுச்சொத்து என்று நாட்டில் ஏதாவது ஒன்று இருக்கிறதா? பள்ளிக்கூடம், மருத்துவமனைகள், போக்குவரத்து, ராணுவ தடவாளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு கொடுத்துள்ளார்கள். இதையெல்லாம் தனியாருக்கு கொடுத்துவிட்டு கோயில்களை அரசு எடுத்துக்கொள்ள விரும்புகிறது. அரசு நடத்துவதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசும் நடத்த வேண்டிய சூழ்நிலைகளை உண்டாக்க பார்க்கிறார்கள். உலகத்திலேயே 37 ஆயிரம் கோயில்களை கொண்ட ஊர் நம்முடைய தமிழர் நாடுதான்.

இப்போதெல்லாம் அரசியல் கட்சி பதவிகளில் கூட தலைவர் என்று சொல்கிற மாதிரியான பதவிகளை யாரும் விரும்புவதில்லை. மாவட்ட தலைவர் என்பதை விட மாவட்ட செயலாளர் என்று அழைப்பதையே அனைவரும் விரும்புகிறார்கள். இந்த ரஜினிகாந்தை எல்லாம் தலைவர் என்று அழைப்பதனால் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறிவி்ட்டார். ஏன் என்றால் அவரை யாரும் மதிப்பதில்லை. அவரெல்லாம் ட்விட்டரை விட்டு வெளியேற வேண்டிய ஆள் இல்லை. நாட்டை விட்டே வெளியேற வேண்டிய ஆட்கள் அவர்கள். மதிக்கின்ற மாதிரி அவர்கள் ஏதாவது செய்தால் மதிப்பார்கள். சிஏஏ-வை எதற்காக எதிர்க்கிறார்கள் என்று கேட்கிறார்கள், சிஏஏ தேவையில்லை, அதனால் எதிர்க்கிறேன். நான் இவ்வளவு நாட்களாக சொல்லிவந்ததை இப்போது தெலுங்கானா முதல்வர் சொல்லிவிட்டார். எனக்கே பிறப்பு சான்றிதழ் இல்லை, என்னுடைய அப்பா, அம்மாவுக்கு நான் எப்படி தருவேன் என்று அவர் கேட்பதைத்தான் நான் பல நாட்களாக கூறிவருகிறேன்.

மாட்டுக்கறி நாம தின்னா அடிப்பார்கள். ட்ரம்ப் வந்தால் ஐந்து விதமாக சமைத்து தருவார்கள். அவரிடம் சொல்ல வேண்டியது தானே, மாட்டை நாங்கள் புனிதமாக கருதுகிறோம் என்று, ஏன் சொல்லவில்லை. ட்ரம்ப் இருக்கும் போது நம்முடைய பிரதமர், ராணுவ அமைச்சர் எல்லாம் எப்படி நின்றார்கள், பள்ளிக்கூடத்தில் பிரேயர் பாடும்போது மாணவர்கள் நிற்பதை போல்தானே நின்றார்கள். ஆசாத் காஷ்மீரை மீட்போம் என்று ஆவேசமாக பேசும் இவர்கள், சீனா ஆக்கிரமிப்பை பற்றி ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள். அவர்களிடம் உண்மையான ராணுவம் இருக்கிறது. போதாக்குறைக்கு கரோனா வைரஸை வேறு வைத்திருக்கிறார்கள். இனி போர் என்றால் பயோவார் தான் நடக்கும். இந்த இடைப்பட்டகாலத்தில் தான் இத்தனை ஆட்டம்,பாட்டம், சொத்து சேர்த்தல் என அனைத்தும் நடைபெறுகிறது. நீங்கள் பணக்காரன், வசதி படைத்தவன் என்றெல்லாம் கொரோனா பார்க்காது. எனவே ஆட்டம் போடாதீர்கள்" என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT