A trending word on Twitter!

Advertisment

ஒரு வார்த்தையை மட்டும் டிவிட்டரில் பதிவிடும் முறை ட்ரெண்டாகி வருகிறது. பல்வேறு பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் 'தமிழ்' என்ற வார்த்தை பதிவிடப்பட்டுள்ளது. திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவரது டிவிட்டர் பக்கத்தில் 'உடன்பிறப்பு' என்ற வார்த்தையைப் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது டிவிட்டர் பக்கத்தில் 'திராவிடம்' என பதிவிட்டுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது டிவிட்டர் பக்கத்தில் 'தமிழ்த்தேசியம்' என்ற வார்த்தையைப் பதிவிட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவரது டிவிட்டர் பக்கத்தில் மை (My) என அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்படி பலரும் தங்களுக்குப் பிடித்த ஒற்றை வார்த்தையை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.