ADVERTISEMENT

மாணவர்களைத் தேடி.. 50 கி.மீ. பஸ், 5 கி.மீ. நடை.. பார்வையற்ற ஆசிரியர்களின் பயணம்.. 

11:30 PM Jun 12, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேருங்கள் என்று விடுமுறை நாட்களில் அந்தந்த கிராமங்களிலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வீட்டுக்கு வீடு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தார்கள். அந்த பிரசாரங்களுக்கு பலர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தாலும் அதைவிட பலர் அரசாங்கம் கொடுத்த 25 வீதம் கல்வி உதவி தொகையில் தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர்களை சேருங்கள் என்று சொன்ன அரசாங்கம் தனியார் பள்ளியில் படிக்கவும் உதவி செய்வதாக சொன்னதால் பல பெற்றோர்கள் தனியாரை நாடிவிட்டனர். ஆனாலும் கிராமத்து இளைஞர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் முழு முயற்சியால் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

ஆனால் அரசாங்கமோ, இளைஞர்களோ, பெற்றோர்களோ ஒரு அரசு பள்ளியில் சேர்க்க எந்த விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யாததால் அந்த பள்ளியின் ஆசிரியர்களே நீண்ட தூரம் மாணவர்களை தேடிச் சென்று தங்கள் பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்த்து வருகிறார்கள். ஆம்.. பார்வையற்ற குழந்தைகளை பார்வையற்றோர் பள்ளியில் படித்தால் அவர்களின் எதிர்காலம் சிறப்படையும் என்பதை யாரும் அந்த மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் எடுத்துச் சொல்லவோ விழிப்புணர்வு ஏற்படுத்தவோ யாரும் இல்லை.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ளது அரசு பார்வையற்றோர் நடுநிலைப் பள்ளி 37 குழந்தைகள் தங்கி படிக்கிறார்கள். அவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி அவர்களின் தனித்திறனை கண்டறிந்து அதற்காண பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்கள் தலைமை ஆசிரியர் விசித்திராவும், ஆசிரியர் சரவணமணிகண்டனும். குழந்தை பாடகர்களை உருவாக்கி உள்ளார்கள். பார்வை இல்லை என்றாலும் கணினி இயக்கி வருகிறார்கள். விளையாட்டிலும் சாதித்து வருகிறார்கள்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 350 பார்வை குறைபாடுகள் உடைய மாணவ, மாணவிகள் சாதாரண பள்ளிகளில் படித்து வருகிறார்கள். அதில் சுமார் 100 பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் பயில வேண்டிய இடம் பார்வையற்றோர் பள்ளி என்பதை ஏற்க மறுக்கிறார்கள் பெற்றோர்கள்.

மாவட்டம் முழுவதும் உள்ள பார்வை திறன் குறைந்த மாணவர்களின் முகவரி பட்டியலை எடுத்துக் கொண்ட தலைமை ஆசிரியையும், ஆசிரியரும்.. ஒவ்வொரு நாளும் கிராமம் கிராம்மான சென்று அந்த குழந்தைகளை எங்கள் பள்ளிக்கு அனுப்புங்கள் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். என்று அழைக்கிறார்கள் சிலர் சம்மதித்து குழந்தைகளை அனுப்புகிறார்கள். பலர் எங்கள் குழந்தையை விட முடியாது என்று மறுக்கிறார்கள்.

இந்தநிலையில் தான் தலைமை ஆசிரியை விசித்திராவும்.. உதவியாளர் பாஸ்கரனும் இன்று செவ்வாய்கிழமை பொன்னமராவதி கிராமத்தில் உள்ள சில மாணவர்களின் வீடுகளுக்கு செல்வதை அறிந்து அவர்களுக்கு முன்பால நாம் சென்றோம்.. புதுக்கோட்டையில் இருந்து 50 கி.மீ. பேருந்தில் பயணித்து 1 கி.மீ. நடந்து அந்த மாணவர்கள் படிக்கும் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்தின் அனுமதியுடன் மாணவர்கள் கார்த்திக் மற்றும் ஒரு மாணவனிடம் விசித்திரா நீண்ட நேரம் பேசினார். மாணவர்கள் அவருடன் செல்ல சம்மதம் என்று சொல்லிவிட்டனர்.

அதன் பிறகு கார்த்திக் என்ற மாணவனின் வீட்டிற்கு சென்றால் அங்கே பார்வையற்ற அவனது அம்மா பூ கட்டிக் கொண்டிருந்தார். எனக்கு பார்வை இருந்தது சர்க்கரை அளவு கூடியதால் பார்வை போய்விட்டது. என் பிழைப்புக்காக பூ கட்டி கொடுக்கிறேன். கார்த்திக்கை விட்டுட்டு எப்படி இருக்க முடியும் என்று மாணவனை அனுப்ப சம்மதிக்கிவில்லை.


ஆனால் தலைமை ஆசிரியை விசித்திரா.. எனக்கும் இப்படித் தான் பார்வை குறைவாக இருந்தது. 8 ம் வகுப்பு வரை சாதாரன பள்ளியில் படித்தேன். புத்தகத்தை உற்று பார்த்து படித்த நிலையில் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. அதன் பிறகு தான் பார்வையற்றோர் பள்ளியில் பணம் கொடுத்து படித்து இப்ப ஆசிரியராக இருக்கிறேன். உங்க பிள்ளை படிக்க அரசாங்கமே பள்ளியை திறந்து வைத்துள்ளது. உங்கள் பிள்ளையின் எதிர்காலம் நல்லா இருக்கனும். அதனால தான் பார்வையற்றோர் பள்ளியில் படித்தால் உற்று நோக்குதல் இல்லாமல் விரலால் மட்டுமே படிக்க கற்றுக் கொண்டு எதையும் சாதிக்கலாம். எங்கள் பள்ளியில் விடுதி வசதி இருக்கு. அவர்களின் தனித்திறனை கண்டறிந்து தனிப்பயிற்சி கொடுத்து வளர்க்கிறோம். சன் சிங்கர் போட்டிக்கு கூட எங்கள் குழந்தைகள் போய் இருக்காங்க. அதனால குழந்தையை எங்கள் கூட அனுப்புங்க. நீங்களும் வாங்க வந்து பாருங்க எல்லாகுழந்தைகளும் எவ்வளவு சந்தோசமா இருக்காங்கன்னு என்று உருக்கமாக பேசப் பேச அந்த தாயும் என் மகனே வருவதா சம்மதிச்சுட்டான். அவன் வாழ்க்கை தான் எங்களுக்கு வேணும். நாங்க இருக்கும் வரை தான் அவனை பாதுகாக்க முடியும் அப்பறம் அவனை அவன் தான் பார்த்துக்கனும். அதனால உங்க பள்ளியில சேர்க்கிறோம்மா என்றவர் என் கணவர் கூலி வேலைக்கு போயிட்டார் அவருகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அழைச்சுக்கும் போங்க என்று போன் நம்பரை கொடுக்க போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக சொன்னதால் நாளை கொண்டு வந்து சேர்க்கிறோம் என்று சம்மதம் தெரிவித்தார் அந்த தாய். மாணவன் கார்த்திக்கும் முகமலர்ச்சியுடன் பார்வையற்றோர் பள்ளியில் படிக்க சம்மதம் என்றான்.

அடுத்து ஒரு மாணவன் வீட்டிற்கு சென்றார்கள்.. அங்கே அவர்களின் பெற்றோர்.. தங்கள் 75 சதவீதம் பார்வை திறன் உள்ளது என்றும்.. கண் அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் பார்வை திரும்பும் என்று சொல்லி இருக்கிறார்கள். மீண்டும் டாக்டர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு வருகிறோம் என்றனர்.

பொன்னமராவதியை முடித்துக் கொண்டு அவர்களின் பயணம் அடுத்து ஒலியமங்கலம் நோக்கி புறப்பட்டது..


பார்வையற்றோர் பள்ளியில் இருந்த ஆசிரியர் சரவணமணிகண்டன்.. மாவட்டம் முழுவதும் 100 பார்வை திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளின் முகவரியை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் 50, 60 கி.மீ பஸ்சில் பயணம் செய்து பிறகு அந்த கிராமங்களுக்கு 5, 6 கி.மீ நடந்து சென்று பெற்றோர்களை சந்திக்கிறோம். கடந்த வாரம் மணமேல்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு அப்படித் தான் சென்றோம். 7 வயது பெண் குழந்தை அருகில் உள்ள சாதாரன அரசு பள்ளியில் படிக்கிறார். அவரை எங்கள் பள்ளியில் சேருங்கள் என்று சொன்னால் பெற்றோரின் பாசம் தடுக்கிறது. குழந்தையை பிரிந்து இருக்க அவர்களுக்கு மனமில்லை. 2 மணி நேரம் பேசினோம் பயனில்லை. எப்படியும் அந்த குழந்தையில் எதிர்காலம் கருதி மறுபடியும் சென்று அழைத்து வருவோம். அதே போல பல பெற்றோர்களுக்கு பாசம் தான் தடுக்கிறது. அந்த பாசத்தால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை நினைக்க மறுக்கிறார்கள் என்றார்.


நாம் வெளியே வரும் போது அங்கு நின்ற ஒரு பெற்றோர்.. எங்க ஊர் மாங்காடு முதலில் அவங்க வந்தப்ப நாங்களும் அப்படித் தான் அனுப்ப மறுத்தோம். குழந்தையின் எதிர்காலம் என்று சொன்ன பிறகு யோசித்தோம். அதன் பிறகு நாங்களே கொண்டு வந்து சேர்த்துவிட்டோம். இன்று எங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் எல்லா குழந்தைகளுக்கும் இனிப்பு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குது. அதனால பார்வை திறன் குறைந்த குழந்தைகளை பார்வையற்றோர் பள்ளியில் படிக்க வைத்தால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் நல்லா இருக்கும் என்பதை உணர்ந்துவிட்டோம் என்றவர்கள்.. தலைமை ஆசிரியரும், ஆசிரியரும் கணவன் மனைவியாக இருப்பதால் ரொம்ப நல்லா குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார்கள் என்றார்கள் மேலும்..


எங்க வீட்டுக்கு அவங்க வரும் போது 30 கி.மீ பஸ்ல வந்து இறங்கி 2 கி.மீ நடந்து வந்தாங்க. அதே போல தான் எல்லா ஊருக்கும் போகவேண்டி இருக்கும். அதனால இப்படி மாணவர்களின் வீடுகளுக்கு போக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கமே ஒரு காரும், ஓட்டுநரும் கொடுத்தால் ரொம்ப வசதியா இருக்கும் என்றனர்.
நாம் வெளியே வரும் போது அத்தனை குழந்தைகளும் ஊஞ்சல், சறுக்கல் என்று விளையாண்டு மகிழ்ந்தார்கள்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT