ADVERTISEMENT

 ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது!- அரசுக்கு கிலி கிளப்பிய பொன்.மாணிக்கவேல் 

04:26 PM Nov 30, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது. சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு பதிலளித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார். பொன்.மாணிக்கவேலுவின் இந்த கடிதம் அரசுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT


திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நியமனத்தின் அடிப்படையிலான பொன். மாணிக்கவேலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனை சுட்டிக்காட்டி, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை இன்றைக்குள் ஒப்படைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் இன்றைக்குள் ஒப்படைக்கும் படி அரசாணை வெளியிடப்பட்டது. இது குறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது. சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று தெரிவித்துள்ளார் பொன்.மாணிக்கவேல்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT