ADVERTISEMENT

எவ்ளோ நாளாச்சு? இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை! - பொள்ளாச்சி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி!

12:06 PM May 22, 2019 | Anonymous (not verified)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர வழக்கில் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு, தன்னிடம் சிக்கும் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறான். பண்ணைவீடுதான் அவனுக்கு பாதுகாப்பான இடம். கட்சி பேதமின்றி அவனுக்கு கஸ்டமர்கள் இருந்திருக்கின்றனர். தொடர்ச்சியாக அங்கு விஜயம் செய்திருக்கின்றனர். இந்த வழக்கை முதலில் விசாரித்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் கூறிய அதிர்ச்சித் தகவல் இது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


சி.பி.சி.ஐ.டி. விசாரித்து, தற்போது இந்த வழக்கை கையிலெடுத்திருக்கும் சி.பி.ஐ. பண்ணைவீட்டைக் குறிவைத்து மே.15-ல் ரெய்டு நடத்தி இருக்கிறது. சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையிலான டீம் ரெய்டில் இறங்கியது. இதுபற்றி உள்ளூர் போலீசார் ஒருவரிடம் கேட்டபோது, சி.பி.ஐ. தங்களிடம் கொடுக்கப்பட்ட வீடியோக்கள் திருநாவுக்கரசின் பண்ணைவீட்டில்தான் எடுக்கப்பட்டனவா? என்பதை அறியத்தான் இந்த ரெய்டு. பண்ணைவீட்டில் இருக்கும் கடிகாரம்தான் முக்கிய ஆதாரமாக சிக்கியிருக்கிறது. அதாவது, "உன்னை நம்பித்தானே வந்தேன்' என ரிஷ்வந்த் என்கிற சபரிராஜனிடம் இளம்பெண் கதறியழும் வீடியோவில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தில் 7.35 மணி காட்டிக் கொண்டிருக்கும்.



அதேபோல சதீஷ் ஒரு பெண்ணுடன் சரசமாடும் வீடியோவில் தென்படும் அதே கடிகாரத்தில், அதே 7.35 மணிதான் காட்டும். சி.பி.ஐ. ரெய்டின்போதும் அந்தக் கடிகாரத்தில் 7.35 என காட்டிக் கொண்டிருந்தது. அப்படியானால், இந்த வீட்டில் வைத்துதான் இந்தக் கொடூரங்கள் நடந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டது சி.பி.ஐ.'' என்றார் அவர். சில தினங்களுக்கு முன்னர், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனைத் தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் ஆச்சிபட்டி மணிவண்ணன். தற்போது கோவை சிறையில் இருக்கும் மணிவண்ணன் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ.



இந்நிலையில், மணிவண்ணன் மீது போடப்பட்டிருப்பது பொய்வழக்கு. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நிஷா பார்த்திபன்தான் அதற்குக் காரணம் என நம்மிடம் தெரிவித்தார் மணிவண்ணனின் வளர்ப்புத் தந்தையான சிவசுப்பிரமணியன். அவர் பேசுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனைத் தாக்கிய வழக்கில் மணிவண்ணன் சரண்டர் ஆனதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 10 நாட்கள் கஸ்டடி எடுக்கணும்னு கோர்ட்ல கேட்டாங்க. ஆனா, முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசுவை மூணே நாள்தான் எடுத்தாங்க.


மணிவண்ணன்கிட்ட நடத்துன விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நிஷா பார்த்திபன், "இந்த வழக்குல உன்னையும் சேர்க்கப் போறோம். நீங்க எட்டுபேர் மட்டும்தான் பொண்ணுக விஷயத்துல சம்பந்தப்பட்டு இருக்கீங்கன்னு யார் கேட்டாலும் சொல்லணும். இந்த பாலியல் வழக்குல நீயும் சம்பந்தப்பட்டு இருக்கன்னு எழுதியிருக்கேன். கையெழுத்துப் போடு'ன்னு மிகக் கொடூரமா அடிச்சிருக்காங்க. மணிவண்ணன் அதுக்கெல்லாம் ஒத்துக்கலை. ஒரு கட்டத்துக்கு மேல கடுப்பான நிஷா, "டக்'குன்னு துப்பாக்கியை எடுத்து மணிவண்ணனோட நெத்திப் பொட்டுல வச்சு, "ஒரே அழுத்துதான், போய்ச் சேந்துருவ..' என மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்காங்க'' என்றவரிடம்…


யாரைக் காப்பாத்த இந்த துப்பாக்கி மிரட்டல்? மணிவண்ணனுக்கும் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனுக்கும் என்ன தொடர்பு?' என இடைமறித்து கேட்டோம்.. அப்போது சிறையில் இருக்கும் மணிவண்ணன் தன்னிடம் சொன்னது அத்த னையையும் சொல்வதாகக் கூறிவிட்டு தொடர்ந்த சிவ சுப்பிரமணியன், திருநாவுக்கரசு ஒருநாள் என் மகன் கிட்ட 25 ஆயிரம் கொண்டுவா, அழகான பொண்ணுக இருக்குன்னு சொல்லி இருக்கான்.


எப்படியோ 25 ஆயிரம் ரூபாய் ரெடி பண் ணிட்டுப் போய் திருநாவுக் கரசுகிட்ட கொடுத்துட்டு, ஒரு பொண்ணுகூட இருந் துட்டு வந்திருக்கான். பொள்ளாச்சி ஜெயராமன் பையன் பிரவீன் அடிக்கடி அந்தப் பண்ணைவீட்டுக்குப் பொண்ணுககிட்ட போயிட்டு வந்ததுகூட உண்மைதான்னு சொன் னான். மத்தபடி, பொண்ணுகளை அடிச்சி, துன்புறுத்திதான் சப்ளை செஞ்சாங்கன்னு அவனுக்கு தெரியாது. அப்படித்தான் திருநாவுக் கரசுகூட பழக்கம் கிடைச்சிருக்கு. சபரிராஜனோட பேசினதுகூட இல்லைன்னு சொன்னான். சபரிராஜனும், வசந்தகுமாரும் மணிவண்ணனைத் தெரியாதுன்னுதான் சொல்லியிருக்காங்க.


என் மகனை இந்த வழக்குல தொடர்புபடுத்தி இருப்பதுல அரசியல் இருக்கு. இல்லைன்னா, எதுக்காக நாங்க எட்டுப்பேர் மட்டுதான் இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்குல சம்பந்தப் பட்டிருக்கோம்னு கையெழுத்துப் போடச்சொல்லி நிஷா பார்த்திபன், மணிவண்ணனை மிரட்டணும்? இந்த வழக்குல அரசியல்வாதிகளின் வாரிசுகளைச் சேர்க்காமல் இருக்கவே நிஷா பார்த்திபன், மணிவண்ணன் மேல பொய் வழக்குப் போட்டி ருக்காங்க. இப்போ சி.பி.ஐ. அதை வழிமொழிந் திருக்கக் கூடாது. சி.பி.ஐ. இந்த வழக்கை நேர்மையா விசாரிக்கும்னு நம்புறேன். அப்படி விசாரிக்கும் பட்சத்தில் மணிவண்ணன் இந்த வழக்கில் இருந்து விடுபடுவான். அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்றார் வருத்தமான குரலில்.



சிவசுப்பிரமணியனின் இந்தக் குற்றச் சாட்டைப் பற்றி நிஷா பார்த்திபனிடம் கேட்ட போது, "இந்த கேஸ் ட்ரான்ஸ்ஃபர்ட் டூ சி.பி.ஐ. எவ்ளோ நாளாச்சு? இவுங்க ஏன் அப்பவே இதையெல்லாம் சொல்லலை? நான் எதுவுமே இதைப்பத்திப் பேச விரும்பலை. அக்யூஸ்டு தரப்புல சொல்றதுக்கெல்லாம் நான் எப்படி விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியும்? எனக்கு ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை' என படபடவென பேசிட்டு லைனை கட் செய்துவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT