ADVERTISEMENT

நாயுடு - ராவ் ஆடும் ஆடுபுலி ஆட்டம்! தேசிய அரசியலில் பரபரப்பு!

01:23 PM May 13, 2019 | Anonymous (not verified)

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான காட்சிகளுக்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் உருட்டும் தாயக் கட்டைகள் பரபரப்பை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. இதில் பா.ஜ.க.-காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்கிற சந்திரசேகரராவை மோடி-அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல்லாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கிறார்கள். மெஜாரிட்டி இடங்களை பா.ஜ.க. பிடிக்கும் வாய்ப்பு அரிது என்றும், அதிக இடங்களைப் பிடித்த கட்சி என்ற அளவில் ரிசல்ட் வரலாம் என்றும் உளவுத்துறை டெல்லிக்கு சிக்னல் தந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளை சேர்த்தாலும் மெஜாரிட்டிக்குத் திண்டாட வேண்டும். இந்த நிலையில்தான், பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை காங்கிரஸுக்காக ஒருங்கிணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை ரீச் செய்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. ஆனால், அங்கே காங்கிரசின் தனிக் கணக்கும் திருப்தி கரமானதாக இல்லை. ராகுலை பிரதமராக ஏற்பதிலும் கட்சிகளுக்கிடையே முரண்பாடு உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிரான மூன்றாவது அணி அமைந்தால் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்குமா என்கிற விவாதமும் அந்தக் கட்சிக்குள் ஓடுகிறது.

ADVERTISEMENT



மாயாவதி, சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரசின் உள்ளே-வெளியே ஆட்டத்தை விரும்பமாட்டார்கள். அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவதையே எதிர்பார்ப்பார்கள். ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் மோடி-அமித்ஷாவின் பா.ஜ.க.வை அடுத்த தேர்தலில் துடைத்தெறிய முடியும் என்கிற காங்கிரசாரின் கருத்தை சோனியாவும் ராகுல்காந்தியும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் பா.ஜ.க. தலைமைக்கும் சென்றுள்ளது. மூன்றாவது அணி அமைப்பதில் நாயுடுவும் மம்தாவும் தீவிரம் காட்டுவார்கள். இதில், ஆந்திராவில் நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்கு பெரிய ஆதரவு இல்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பலம் காட்டுவார். அகிலேஷ், மாயாவதி கூட்டணி பா.ஜ.க.வுக்கு எதிராக இருந்தாலும் சந்திரசேகரராவும் ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜ.க. பக்கம் வருவார்கள்; அதனால்தான், தெலங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகரராவ் மூலம், காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகளை இழுத்து மூன்றாவது அணியை உருவாக்குவதில் பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டுகிறது. தனது முன்னாள் குருவான சந்திரபாபு நாயுடுவின் வியூகங்களையும் அறிந்தவர் சந்திரசேகரராவ்.

ADVERTISEMENT



மோடியின் கட்டளைப்படி, கடந்த 30-ந் தேதி சந்திரசேகர ராவிடம் 2 மணி நேரம் விவாதித்திருக்கிறார் அமித்ஷா. காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், மூன்றாவது அணி சார்பில் சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்க ராகுல் திட்டமிட்டிருக்கிறார். "நாயுடு பிரதமராவது உங்களுக்குத்தான் தலைவலி' எனச் சொன்ன அமித்ஷா, "உ.பி. யில் மொத்தமுள்ள 80 இடங் களில் அகிலேஷ்-மாயாவதி கூட் டணி 60 இடங்களைப் பிடித்து விட்டால் பிரதமர் பதவியை கைப்பற்ற மாயாவதி துடிப்பார். மாநிலத்துக்கு அகிலேஷும் மத்தியில் மாயாவதியும்ங்கிறது தான் அவர்களின் தேர்தல் அஜெண்டா. மம்தாவுக்கும் நாயுடுவுக்கும் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காது போனால் தலித் தலைவர் என்கிற கோஷத்தை முன்னிறுத்தி மாயாவதிக்கு ஆதரவு தர காங்கிரசும் கீழிறங்கி வரும். அந்த சந்தர்ப்பத்தை காங்கிரசுக்கு தரக்கூடாது. நாமும் தலித் கோஷத்தை முன்னெடுப்போம். இதையெல்லாம் கணக்கிட்டு, காங்கிரஸ் கூட்டணியிலுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமியையும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து இப்போதே பேசி வையுங்கள்' என்ற அமித்ஷா, யாரிடம் எப்படிப் பேசி சரிக் கட்ட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.



கர்நாடக முன்னாள் முதல்வர் காங்கிரஸ் சித்த ராமையாவின் நெருக்கடியால் ஆட்சியை நடத்த அல்லாடும் குமாரசாமி, காங்கிரசை மிரட்டுவதற்காக ராவை சந்திக்க ஒப்புக்கொண்டார். அந்த சந்திப்பில், "காங்கிரஸ் இங்கே தனது நிலையை மாற்றிக் கொண்டால் நான் உங்கள் முயற்சிக்கு ஆதரவளிக்க முடியாது. இல்லையென்றால், ஆதரிக்கிறேன்' என சொல்லியிருக்கிறார் குமாரசாமி. "காங்கிரஸ் தயவின்றி ஆட்சியை பாதுகாக்க பா.ஜ.க. வின் ஆதரவை நான் வாங்கித் தருகிறேன்' என ராவ் தெரிவிக்க, பட்டும் படாமல் ஒரு உடன்பாடு அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.



பா.ஜ.க.வை எதிரியாக நினைக்கும் சி.பி.எம். கட்சி, காங்கிரசுடனும் மம்தாவுடனும் முரண்பட்டு நிற்கிறது. அதனால் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார் ராவ். அந்த சந்திப்பில், "இந்த தேர்தலில் சி.பி.எம். ஜெயிக்கப் போவது சில தொகுதிகளில்தான். அதனால் தேர்தல் முடிவுகள் வரட்டும். அப்போதைய சூழலை வைத்து சி.பி.எம். தலைவர்களிடம் பேசுகிறேன்' என ராவிடம் தெரிவித்து விட்டார் விஜயன். ஸ்டாலினை சந்திக்க ராவ் முயற்சித்தபோது, சந்திப்புக்கான நேரம் இறுதி செய்யப்பட வில்லை. இந்த நிலையில் தொடர்ந்து ராவ் எடுத்த முயற்சியால் திங்கள்கிழமை சந்திப்பதற்கு கடந்த 11ஆம் தேதி நேரத்தை உறுதி செய்தது ஸ்டாலின் தரப்பு.



சந்திப்புகளின் விவரங்களை தனது கட்சியின் டெல்லி அரசியலை கவனித்துக்கொள்ளும் தனது மகளும் எம்.பி.யுமான கவிதா மூலம் அமித்ஷாவுக்கும் தேவைப்படுகிற சமயத்தில் மோடிக்கும் பாஸ் செய்து வருகிறார் சந்திரசேகரராவ். தேசிய வாத காங்கிரஸ் சரத்பவாரை இழுக்க கவிதாவிடம் அசைன் மெண்ட்டை கொடுத்துள்ளது பா.ஜ.க. தலைமை. கவிதாவும் சரத்பவாரின் மகளான சுப்ரியா சுலே எம்.பி.யும் நல்ல தோழிகள். சரத்பவாரின் ஆதரவை பெற சுப்ரியாவிடம் பேசி வருகிறார் கவிதா என்கிறது நம்மிடம் விவரங்களைப் பகிர்ந்த டெல்லி தரப்பு.



பா.ஜ.க.வுக்காக சந்திரசேகர ராவ் விளையாடத் துவங்கி யிருப்பதால் அவசரம் அவசரமாக ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசித்தார் சந்திரபாபு நாயுடு. அந்த ஆலோசனையில் மன்மோகன்சிங், அகமது படேல், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தனர். இது குறித்து நாம் விசாரித்தபோது, ""சந்திரசேகரராவின் வேகம் குறித்து முதலில் அலசியுள்ளனர். அதில், சரத்பவார், ஸ்டாலின், குமாரசாமி மூவரையும் வளைக்க பா.ஜ.க. எடுக்கும் முயற்சிகள்தான் விரிவாகப் பேசப் பட்டது. சம்பந்தப்பட்ட மூவர் தரப்பிலும், தான் பேசியதாகவும், யாரும் ராவுக்கு பிடிகொடுக்கவில்லை எனவும் ராகுல் காந்தியிடம் சொல்லியிருக்கிறார் நாயுடு. அப்போது, "அவர்களை நம் பக்கமே இருக்க வைப்பது உங்களால்தான் முடியும்' என சொன்ன ராகுல், "தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தால் ஆட்சியமைக்க நம்மை ஜனாதி பதி அழைக்கமாட்டாராம். அதுவே பா.ஜ.க. வந்தால் அழைப் பாராம். இந்த அஜெண்டாவை ஜனாதிபதிக்கு, பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது' என்றிருக்கிறார்.

"அதை நாம் எதிர்க்க வேண்டும்' என நாயுடு சொல்ல, அப்போது பேசிய ராகுல்காந்தி, "ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் தனிப்பெரும் கட்சி என பார்க்கக் கூடாது. கூட்டணியைத் தான் பார்க்க வேண்டும்' என வலியுறுத்துவோம். அதனையும் ஜனாதிபதி புறக்கணித்தால், "பா.ஜ.க.வை அழைக்கும்போதே அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் ஆதரவு கடிதத்தையும் வாங்கிக்கொண்டு அதில் பெரும்பான்மை இருக்கும்பட்சத்தில் மட்டுமே பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்' என ஜனாதிபதியிடம் வலியுறுத்தலாம். அத்துடன், "பா.ஜ.க. ஆதரவு கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வழி களை முன்னெ டுக்க வேண்டும்' என சொல்ல, மற்றவர்களும் இதேரீதியில் பேசியிருக்கிறார்கள். இதனை யடுத்து, "மம்தா ஒத்துழைத்தால், கடைசி 2-கட்ட தேர்தலிலும் பா.ஜ.க.வை முடக்கிவிடலாம்' என விவாதம் வந்திருக்கிறது. அப் போது, மம்தாவிடம் "காங் கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை தவிர்க்கப் பாருங்கள் என சொல்கிறேன். நான் சொன்னால் அவர் கேட்பார்' என சொன்னார் நாயுடு.

தொடர்ந்து பேசிய நாயுடு, "பா.ஜ.க.வால் ஆட்சியை தக்க வைக்க முடியாது போனால், நிதிஷ்குமார் அல்லது மாயாவதி யை பிரதமராக்க மோடி திட்ட மிடுகிறார். ஆனால், இருவரிட மும் நானும் பேசி வருகிறேன்' என அவர் சொன்னது, காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதனையடுத்து, "மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைப்பதை தடுப்பதற்கான வழி களை பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத் துக் கட்சிகளையும் 21-ந் தேதி கூட்டி விவாதிப்போம். அதில், சரத்பவார், மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரி வால், மு.க.ஸ்டா லின் மற்றும் இடது சாரி தலைவர் களின் ஆலோ சனையை கேட் போம்' என முடி வெடுத்துள்ளனர்'' என்கின்றனர் டெல்லியோடு தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள். இதனி டையே, தொங்கு நாடாளுமன் றம் அமைந்தால் காங்கிரஸை ஆத ரிக்கலாம் என சந்திரசேகரராவ் சொல்லியிருப்பதுகூட, சந்திரபாபு நாயுடுவின் மூவை முறியடிக்க பா.ஜ.க. வகுத்த வியூகம் என்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் தெரிய இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், தங்களின் ஆட்சி அமையவும், எதிரிகள் ஆட்சியமைப்பதை தடுக்கவும் பா.ஜ.க.- காங்கிரஸ் ஆடும் ஆடு-புலி ஆட் டம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT