Skip to main content

இது எல்லாமே ஸ்டாலின் ராஜதந்திரமா? 

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.மேலும் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு யார் ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்று பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் வாக்காளர்கள் மத்தியிலும்,அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

dmk



இந்த தேர்தலில் அதிமுகவை கடுமையாக விமர்சித்த பாமக அதிமுகவிடம் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. முதலில் பாமக திமுகவிடம் தான் கூட்டணி குறித்து பேசியதாகவும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் அதனால் அவர்களை கூட்டணியில் சேர்க்கவிட்டால் அதிமுகவிடம் கூட்டணிக்கு செல்வார்கள் அதனால் அந்த கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் மற்றும் மக்கள் அதிருப்தியில் திமுகவிற்கு பலம் சேரும் என்பதாலேயே ஸ்டாலின் இந்த ராஜதந்திர முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் கடந்த சில நாட்களாக திமுக பாஜகவிடம் பேசியது,மூன்றாவது அணி அமைக்க விரும்பும் சந்திரசேகரராவிடம் பேசியது என்று பெரும் விவாதத்தை அரசியல் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

 

dmk



இந்த மூவ் எல்லாமே ஸ்டாலின் தனது அரசியல்  இமேஜை இந்திய அளவில் உயர்த்துவர்க்காக எடுக்கப்பட்டது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி இருக்கும் நிலையில் ஸ்டாலின், திமுக,காங்கிரஸ் கூட்டணியில் ராகுல்காந்தி தான் அடுத்து இந்தியாவின் பிரதமர் என்றும் அறிவித்தார்.மேலும் மற்ற மாநிலத்தில் பாஜக அல்லாத கூட்டணியில் இருப்பவர்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

 

dmk



இந்த நிலையில் திமுக தலைவர் ஏற்கனவே ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறியதால், தேர்தல் முடிவுக்கு பின் மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பன்மை இல்லாமல் ஆட்சியை அமைக்க மாநில கட்சியின் ஆதரவு தேவை என்ற நிலைப்பாடு வந்தால் மாநில கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி செய்யும் அப்போது திமுகவின் நிலைப்பாடு என்ன என்று அறியவே இப்படியான அரசியல் மூவ்கள் நடப்பதாகவும் அதை ஸ்டாலின் சிறப்பாக கையாளுகிறார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.