ADVERTISEMENT

"ஐ ஆம் மோமோ"...பலி கேட்கும் மோமோ சேலஞ்..  

02:56 PM Aug 11, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

தமிழகத்தில் சில இளைஞர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்ததுதான் ப்ளூ வேல் கேம். இந்த கேமால் தமிழகத்தைச்சேர்ந்த இளைஞர்கள் மட்டும் உயிரிழக்கவில்லை, உலகம் முழுவதுமே இந்த விளையாட்டை விளையாடிய பலர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொருநாள் கொடுக்கப்படும் சவால்களை முடித்துக்க வேண்டும். பின்னர் விளையாட்டினால் தாக்கம் ஏற்பட்டு, இறுதியில் வெற்றி என்பது மரணம் என்று தெரிந்தும் இதை விளையாடினார்கள். இந்த விளையாட்டைப்பற்றின விழிப்புணர்வுகளை மக்களிடத்தில் கொண்டுவந்து, இந்த விளையாட்டினால் போக இருந்த உயிர்களை காப்பாற்றினார்கள். தற்போது இதை உருவெடுத்தது போலவே, ஸ்மார்ட் போன்களில் மோமோ சேலஞ் என்னும் விளையாட்டு உலாவருகிறது.

ADVERTISEMENT

மோமோ சேலஞ்சா! ஆம், ப்ளூ வேல் சேலஞ் போன்று இந்த விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டு. மோமோ என்னும் கேம் ப்ளூ வேல் போன்று ஆன்லைன் வலைதளத்தில் விளையாடுவது அல்ல, நாம் மெசேஜ் அனுப்பி தொடர்புகொண்டுவரும் வாட்ஸப்பில் விளையாடுவது. வாட்ஸப்பில், அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து "நான் தான் மோமோ, என்னை உங்கள் மொபைலில் சேவ் செய்துக்கொள்ளுங்கள், நான் உன்னுடைய நண்பனாக இருக்க ஆசை படுகிறேன்" என்று அடையாளம் தெரியாத மொபைல் எண்ணிலிருந்து மெசேஜ் வரும், பிறகு படிப்படியாக பேசி நம்முடைய அந்தரங்களை தெரிந்துகொள்கின்றனர். நம்மை அவர்கள் வசமாக்க, குறிப்பிட்ட மனநிலையில் நம்மை மாற்றும் அளவுக்கான புகைப்படங்களை நமக்கு மெசேஜ் செய்கின்றனர். இதனால் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு விளையாடுபவர்கள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறார்கள். பிறகு விளையாடுபவர்களை பிளாக்மெயில் செய்வதற்காக அவர்களின் அந்தரங்க புகைப்படங்களையும் எப்படியோ மனதை மாற்றி பெற்றுவிடுகின்றனர். இறுதியில், நீ தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளை விடுகிறார்கள். மேலும், அதை நான் பார்க்க வேண்டும் ஆகையால் அதை வீடியோ எடுத்துக்கொண்டே தற்கொலை செய்துகொள் என்று விளையாடுபவர்களை கொலை செய்கின்றனர். மேலும் மோமோ அனுப்பும் புகைப்படங்களில் மால்வேர் வைரஸ்களை அனுப்பி மொபைலையும் ஹேக் செய்கிறார்கள். இந்த மிருகத்தனாமன வேலையை உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஹேக்கர்தான் செய்கிறார் என்கிறார்கள்.

இந்த விளையாட்டால் அர்ஜென்டினாவைச்சேர்ந்த 12 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 12 வயது குழந்தை என்பதால் அந்த குழந்தையின் வயதிற்கு ஏற்றவாறு,' நான் இரவில் வந்து உன்னை பயம் செய்வேன் அல்லது உன்னுடைய அப்பா அம்மாவை மிரட்டுவேன்' என்று பிளாக்மெயில் செய்து அச்சிறுமியை தற்கொலை செய்ய தூண்டியுள்ளனர். மேலும் அந்த மெசேஜில் நீ தற்கொலை செய்யும்போதே அதை வீடியோவும் எடுக்கவேண்டும் என்று கட்டளையிட அந்த 12 வயது சிறுமியும் அந்த மோமோ என்னும் கதாபாத்திரத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்துள்ளார். இந்த சிறுமி தன்னுடைய வீட்டின் பின்புறத்திலுள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடுவதை சிறுமியின் அண்ணன் வீட்டிலிருந்தபடி பார்த்து, தன் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு தடுக்க வந்துள்ளான். ஆனால், அதற்குள் அந்த 12வயது சிறுமி உயிரிழந்தாள். பின்னர் அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவலர்களிடம் புகாரளிக்க, மோமோ என்று பேசியது ஜப்பான் எண் மூலமாக பேசியிருக்கிறார் என்று கண்டுபிடித்தனர். பின்னர் இதுபோன்று கொலம்பியா, மெக்சிகோ ஆகிய எண்களிலும் பிற நாடுகளில் மோமோ சேலஞ் நடைபெறுகிறது. மோமோ சேலஞ் வாட்ஸப் எண்ணை சேவ் செய்தால், ஜப்பானைச் சேர்ந்த பயமூட்டும் சிற்பமான மோமோவை ப்ரொபைல் படமாக வைத்திருக்கிறது. இந்த மோமோ சிற்பத்திற்கும், சிற்பத்தை செதுக்கியவற்கும் இந்த சேலஞ்சில் சம்மந்தம் இல்லை என்கிறார்கள். இதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஆகையால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த கொடுக்கையில் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்....விழிப்புணர்வுடன் இருங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT