cyber

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

புனேவை தலைமையகமாக கொண்டு செயல்படும் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியின் சர்வரை சைபர் குற்றவாளிகள்ஹாக் செய்து இந்திய மற்றும் இந்தியாவிற்கு வெளியே என சுமார் 94 கோடி ரூபாய் பரிமாற்றம் மற்றும் 15,000 முறை பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக வங்கி புகார் அளித்துள்ளது.

காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி இது தொடர்பாக கொடுத்துள்ள புகாரில்,

கடந்த 11 ஆம் தேதி மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணிவரை வங்கியின் சர்வரை மர்ம நபர்கள் ஹாக் செய்து 15,000 முறையற்ற பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 94 கோடியை வெளிநாட்டிற்கு மாற்றியுள்ளனர். 2.5 கோடியை இந்தியாவிற்குள் பரிவர்த்தனை செய்துள்ளனர்.

Advertisment

அதேபோல் இரண்டாவது முறையாக கடந்த 13 தேதியும் நண்பகல் 11 மணிக்கு சர்வரை ஹாக் செய்து சுமார் 13.92 கோடியை ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் வங்கியில் ஏஎல்எம் டிரெடிங் லிமிடெட் நிறுவன கணக்கிற்கு மாற்றியுள்ளனர். மேலும் பல வடிக்கையாளர்களின் வங்கி கணக்கு தகவல்களும் திருடப்பட்டுள்ளது எனக்கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.