ADVERTISEMENT

"வாக்குப்பதிவு நாளன்று மோடி ரோடு ஷோ போகிறார்; நேர்மையாகத் தேர்தல் நடந்திருந்தால் குஜராத்தில் பாஜக தோல்வி அடைந்திருக்கும்.." - திமுக புகழேந்தி பேச்சு

11:11 AM Dec 10, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் குஜராத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள பாஜக, இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாகக் காங்கிரஸ் இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து திமுகவின் இள.புகழேந்தி அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

குஜராத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றிபெற்றிருக்கிறார்கள், குஜராத்தில் தோல்வி அடைந்தால் தான் ஆச்சரியம்,வெற்று பெறுவது ஆச்சரியம் இல்லை என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் கூறி வருகிறார்கள். இந்த தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலில் இந்தத்தேர்தலோடு உ.பியில் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் யோகி ஆதித்தியநாத் முதல்வராக உள்ள உ.பி மாநிலத்தில் நடைபெற்ற இந்தத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. சமாஜ்வாதி கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது. இதை நாம் எளிதில் கடந்து போக முடியாது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த தோல்வி பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தத்தோல்வி நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் அங்கு எதிரொலிக்கும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

குஜராத் என்பது மோடி அமித்ஷாவின் சொந்த ஊர், இந்த தேர்தலில் அவர்கள் வெற்றிபெற என்னவெல்லாம் செய்தார்கள் என்று சொல்லித்தெரியவில்லை. வாக்களிக்க வந்த பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் ரோட்டில் ரோட் ஷோ செல்கிறார், ஏன் இவ்வாறு வழிமுறையை மீறிச் செல்கிறீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மோடி தேர்தல் நாள் அன்று நடைப்பயணம் மேற்கொண்ட அந்த தொகுதியில் தேர்தலையே நிறுத்தியிருக்க வேண்டும். அதுதான் சரியான ஜனநாயகமாக இருந்திருக்கும். ஆனால் தேர்தல் ஆணையம் அவ்வாறு நடந்துகொள்ளாது என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்போது கூட யாராவது வழக்குப் போட்டால் மோடி அவர்கள் சட்ட விதிகளை மீறியிருக்கிறார் என்று கூறி அந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தலையே தடை செய்திருப்பார்கள். அதையும் தாண்டி இந்த இரண்டு மாதங்களில் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகளை அங்கு விதிகளை மீறிக் கொண்டு சென்றார்கள் என்று பார்க்க வேண்டும். இரண்டு லட்சம் கோடிக்கு அதிகமாக முதலீடுகள் அங்கே சென்றுள்ளது. இது அனைத்தும் தேர்தலுக்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட நாடகம். எல்லா மாநிலத்துக்கும் மத்திய அரசு தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு இதே மாதிரி நிதி ஒதுக்குமா?தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு இவர்கள் சென்றுள்ளார்கள்.

இது நிச்சயம் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். இவர்கள் இன்றைக்கு இல்லை என்றாலும் ஒருநாள் மக்கள் முன் அம்பலப்பட்டுப் போகப்போகிறார்கள் என்பது மட்டும் நிஜம். அதற்கான சூழ்நிலைகள் நிச்சயம் வரும்.அப்போது மக்கள் இவர்களுக்கு நல்ல முடிவைப் பரிசளிப்பார்கள். அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும் குஜராத்தில் தேர்தலில் மக்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வாக்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் என்ன ஆனது. அங்கே இவர்கள் எதையும் செய்யவில்லை, தோல்வி அடைந்தார்கள். இவர்கள் தேர்தலை ஒழுங்காக நடத்தினாலே அங்கு பாஜக தோத்துவிடும். எனவே தேர்தல் நடைபெறும் முறைதான் மிகமுக்கியமான அம்சமாக இருக்கிறது. மக்களை விலைக்கு வாங்கி பழக்கப்பட்ட பாஜக இந்த வெற்றியையும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT