ADVERTISEMENT

காவு கேட்கும் மயிலாடுதுறை பாதாள சாக்கடைத் திட்டம்!

12:06 PM Jul 20, 2018 | rajavel


ADVERTISEMENT

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய்கள் அடிக்கடி உள்வாங்கி வருகிறது. எந்த நேரத்திலும் பெரிய ஆபத்து காத்திருக்கிறது என கவலைப்படுகிறார்கள் நகரவாசிகள்.

ADVERTISEMENT

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 47 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதையொட்டி பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டபோதே உள்வாங்கிக் கொள்வதும், இடிந்து விழுவதும் என பல்வேறு விபத்துகள் நடைபெற்றன. மழைகாலங்களில் அடிக்கடி மண் உள்வாங்கிக் கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.


நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு முழுமை பெறாமலேயே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. அதன் பிறகு பாதாள சாக்கடை குழாய்களின் மூடிகள் அடிக்கடி உடைவதும், அதை மாற்றுவதுமாகவே இருந்தது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை யூனியன் அலுவலகத்திற்கு எதிரே திருவாரூர் சாலையில் பாதாள சாக்கடை உள்வாங்கி திடீர் பள்ளமானது. நான்கு நாள் அந்த வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மேம்போக்காக சரி செய்தனர். பிறகு சப்ஜெயில் அருகில் தரங்கம்பாடி சாலையில் உள்வாங்கியது. எந்த விதமான ஆபத்தும் நிகழவில்லை. மாறுவாரமே நேற்று மாலை ஐயா ரப்பர் கீழவீதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய் வெடித்து உள்வாங்கிக் கொண்டது. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சுமார் 20 அடி ஆழம் வரை சாலை உள் வாங்கியுள்ளதால் அந்த வழியாக போக்குவரத்தை தடை செய்தனர்.


இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், "தி.மு.க ஆட்சியில் கோ.சி.மணி அமைச்சராக இருக்கும் போது கும்பகோணத்தை தொடர்ந்து மயிலாடுதுறைக்கு 47 கோடி நிதியை ஒதுக்கி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். டி.ஆர். பாலுவும் இருந்தார். பிறகு ஆட்சி மாறியது. மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வாக அப்போது பா.ஜ.க. வின் எம்.எல்.ஏ வாக இருந்தவர் ஜெகவீரபாண்டியன். (தற்போது தி.மு.கவில் இருக்கிறார்) அவரது மனைவி தேன்மொழி மயிலாடுதுறை நகராட்சி தலைவராக இருந்தார். இவர்களோடு சில கவுன்சிலர்களும் இணைந்து கொண்டு குழப்படியான வேலைகளை செய்து விட்டனர். அதனால் முழுமை பெறதா திட்டமாகவும், அடிக்கடி ஆபத்தை உண்டாக்கும் திட்டமாகவும் மாறி விட்டது. மழை காலங்களில் மிக மோசமான நிலமையில் இருக்கும். இங்கு துவங்கியது போல் தான் குடந்தையிலும் துவங்கப்பட்டது ஆனால் அங்கு இதுவரை எந்த குறையும் இல்லை. அதற்கு ஊழல்தான் காரனம்" என்கிறார்.
காவு கேட்கும் இந்த பாதாள சாக்கடை திட்டத்தை பேராபத்து ஏற்படாமல் விரைவில் சரி செய்தால் சரி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT