ADVERTISEMENT

தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம் யாருடையது தெரியுமா?

01:19 PM Mar 25, 2018 | raja@nakkheeran.in

மார்ச்- 25 வண்ணத்தொலைக்காட்சி அறிமுகமான தினம்!

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது, மும்பையில் தீவிரவாதிகள் நாசவேலை, ஜெ. சிறை மற்றும் மரணம், திமுக மாநாடு நிகழ்ச்சிகள் என பல்லாயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ள அமெரிக்காவில் நடப்பதையும், சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சென்னையில் நடப்பதையும், பக்கத்து தெருவில் நடப்பதை வீட்டை விட்டு நகராமல் வீட்டின் மையத்தில் அமர்ந்து ஒருவரால் பார்க்க முடிகிறது, அதற்கு தனது வினையை ஆற்ற முடிகிறது என்றால் அதற்குக் காரணம் தொலைக்காட்சி. உலகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த நிமிடமே நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது, கேட்க வைக்கிறது தொலைக்காட்சி பெட்டிகள்.

இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் அது ஒரு அங்கமாகிவிட்டது. அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் சுயம் தொலைந்து போவது ஒருபுறம்மென்றால், மனிதனுக்கு அனைத்தையும் கற்று தருவதும் தொலைக்காட்சிகளாகவே உள்ளன. ஒருகாலத்தில் அது பணக்காரர்கள் பயன்படுத்தும் கருவியாக இருந்தது, இன்று அது குப்பைகள் போல் குவிந்துக்கிடக்கின்றன. அரசாங்கமே தொலைக்காட்சியை இலவசமாக தரும் நிலையில் உள்ளது.

ஜான் லூகி பர்டு




தொலைக்காட்சிக்கான தொழில்நுட்பமான பிச்சர் டியூப், கதிரியக்கம், ஒலி என ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் கண்டுபிடித்து உலகில் ஏதோ ஒரு வகையில் பயன்பாட்டில் இருந்தது. அதை தொலைக்காட்சிக்கான பயன்பாடாக மாற்றி பொருத்தி தொலைக்காட்சி பெட்டியை உருவாக்கியவர் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப விஞ்ஞானி ஜான் லூகி பர்டு. இவர் தான் 1926ல் முதன்முதலாக தொலைக்காட்சியை கண்டுபிடித்து டெலிவிசர் என்கிற பெயரில் நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தார். அதனால் இவரை தொலைக்காட்சிகளின் தந்தை என கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம் ஒரு சிறுவனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. கலர் – வெள்ளை படமாக காட்டிய தொலைக்காட்சியை கலர் படமாக காட்ட விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர். அந்த முயற்சியில் இங்கிலாந்தை சேர்ந்த ஆர்.சி.ஏ என்கிற தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் தான் வெற்றிபெற்றது. 1954 மார்ச் 25ல் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டியை வெளியிட்டது. இந்த நிறுவனத்துடன் தொழில் ஒப்பந்தம் பி.பி.சி நிறுவனம் செய்துயிருந்தது. கறுப்பு – வெள்ளையில் படம் பார்ப்பது மாறி கலரில் படம் பார்க்க துவங்கினர் மக்கள். அது மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

அதன்பின் தொலைக்காட்சி பெட்டியின் வடிவம் சதுரத்தில் இருந்து செவ்வக வடிவிற்க்கு மாறியது. பிச்சர் டியூப் என்பது மாறி பிளாஸ்மா, எல்.சி.டி, எல்.இ.டி, 3டி, 5டி டெக்னாலஜி கொண்ட தொலைக்காட்சிகள் வந்துவிட்டன என்பது குறிப்பிடதக்கது. இப்படி தொலைக்காட்சி பல தன்மைகளில் கிடைக்கும் சூழலில், வண்ணத்தொலைக்காட்சி கண்டுபிடிப்பு மிக முக்கிய காரணம் என்றால் மிகையில்லை.

1996ல் அனைத்துலக தொலைக்காட்சி நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்திய வருடாந்திர கூட்டத்தில் தொலைக்காட்சி தினம் என ஒன்றை அறிவிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக்கொள்ள அவர்களும் தொலைக்காட்சிகளின் பங்கை உணர்ந்துக்கொண்டு உலக தொலைக்காட்சி தினம் நவம்பர் 21ந்தேதி என ஒரு தினத்தை உருவாக்கினார்கள். 1997 முதல் இந்தநாள் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT