ADVERTISEMENT

"அண்ணாமலை 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டியிருக்காருன்னு போட்டு கொடுத்ததே அவரு கூட இருக்கிறவருதான்..." - குடியாத்தம் குமரன்

04:12 PM Dec 22, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற சம்பவம் சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட நகர்வாக அண்ணாமலையின் வாட்ச் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரபேல் போர் விமானத்தைத் தயாரித்த நிறுவனம் உருவாக்கியதாக அண்ணாமலையால் கூறப்பட்ட அந்த வாட்ச் உலகத்திலேயே மொத்தம் 500 மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வாட்ச் விலை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், இந்த வாட்ச் வாங்கியதற்கான பில்லை வெளியிடும் படி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் டீக்கடையில் இந்த வாட்சை பற்றி எப்போது மக்கள் பேசுகிறார்களோ அப்போது பில்லை வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரனிடம் நாம் கேட்டபோது, " இந்த வாட்ச் விவகாரத்தை முதலில் யார் பேசினார்கள் என்று பார்க்க வேண்டும். அண்ணாமலை என்ன வாட்ச் அணிந்திருக்கிறார், அது எவ்வளவு விலை என்று யாருக்குத் தெரியும். அண்ணாமலை கூட இருந்தவர்கள் கூறினால்தானே இதன் உண்மை நமக்குத் தெரியவரும். இந்த வாட்ச் விஷயத்தில் அண்ணாமலை கூட இருந்த ஒருவர்தான் இதைப் பெரிதுபடுத்த வேண்டும் என்று அதனை வெளியே கசியவிட்டிருக்க வேண்டும். அதையும் தாண்டி நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது, இவர் என்ன வாட்ச் அணிகிறார் என்பதைப் பார்த்து அதனை விமர்சிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் இவர் எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தால், அடுத்தவர்கள் என்ன உடை உடுத்துகிறார்கள், கண்ணாடி என்ன போடுகிறார்கள், என்ன காரில் வருகிறார்கள் என்பதையெல்லாம் ஆராய்கிறார். தன்னை ஏழைத்தாயின் மகன் என்று தொடர்ந்து கூறிக்கொள்ளும் இவர் இவ்வளவு விலையில் வாட்ச் அணிந்தால் யார் சும்மா விடுவார்கள்.

இவரிடம் என்ன கேட்டோம், வாட்ச் வாங்கியுள்ளீர்களே அதற்கான பில்லை கொடுங்கள் என்று கேட்டோம். அதற்கு இவர் என்ன சொல்கிறார். டீக்கடையில் பேச வேண்டும், வெடிக்கடையில் பேச வேண்டும் என்கிறார். பிறகு ஏப்ரல் முதல் தேதி வெளியிடுகிறேன் என்கிறார். பொருளைக் கொடுத்துவிட்டு பில்லை நான்கு மாதம் கழித்துத்தான் கடைக்காரர் கொடுப்பாரா? இவர் எதற்காக அவகாசம் கேட்கிறார். இல்லை, பில்லே இனிதான் தயாரிக்க வேண்டுமா? அப்படி இருந்தால் கூட நான்கு மாதம் எதற்காக அவகாசம் கேட்கிறார் என்று தெரியவில்லை. இந்த அரசியல் கோமாளி வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT