ADVERTISEMENT

ஜெயலலிதா பாணியில் எதை செய்தாரோ இல்லையோ, இவைகளை செய்துவிட்டார் எடப்பாடி!!!

12:05 PM Mar 07, 2019 | kamalkumar

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015ம் ஆண்டு மறைந்தார். அதைத்தொடர்ந்து சிறிது காலம் ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியவுடன், முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி.


ADVERTISEMENT




இந்த ஆட்சி மூன்றுமாதம்கூட தாங்காது என பெரும்பாலானோர் கூற, மூன்று ஆண்டுகள் வரை வந்துவிட்டார். அவர் ஆட்சியை தக்கவைக்க செய்பவை விமர்சனத்திற்குள்ளானாலும் அவர் தனது ஆட்சியை நடத்திக்கொண்டே இருக்கிறார்.

ADVERTISEMENT

இதற்குமுன் பல இக்கட்டான சூழ்நிலைகளை அவர் எப்படியோ சமாளித்துள்ளார். தற்போது இருக்கும் அரசியல் நெருக்கடிகளையும் அவர் சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஜெயலலிதா தனது திட்டங்களை பெரும்பாலும் 110 விதியின்கீழ்தான் அமல்படுத்துவார். அதேபோல் எடப்பாடியும் சில திட்டங்களை 110 விதியின்கீழ் அண்மையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார். அவர் அப்படி அறிவித்தவற்றில் ஒன்றுதான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு 2000 ரூபாய் திட்டம்.

அதேபோல் ஜெயலலிதாவை அதிமுகவினர் அம்மா என்றுதான் அழைப்பர். பின்னர் அதுவே அவரின் இன்னொரு பெயராக நின்றது. அவருக்கும் அந்தப் பெயர் பிடித்திருந்தது. இதனாலேயே அதிமுக அறிவித்த பல திட்டங்கள் ‘அம்மா’ என்ற பெயரிலேயே இருக்கும். அதுபோலவே தற்போது எடப்பாடி பழனிசாமி அரசும் பல இடங்களின் பெயரை எம்.ஜி.ஆர். என மாற்றிவருகிறது.

மேலும் விளம்பரங்களில் தன்னை முன்னிலைப்படுத்துவது உட்பட பல்வேறு விஷயங்களில் அவர் ஜெயலலிதா போல் செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT