நேற்று சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய திருநெல்வேலி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரை பேசினார். அப்போது அவர்,

Advertisment

edappadi palanisamy jayalalithaa

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல, எளியவர்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்ட் போனை போன்றவர் நம் முதலமைச்சர் என்று கூறிய அவர், இந்த ஆட்சி கலையும் என்று கூறிவர்களுக்கு, லித்தியம் பேட்டரி போன்று நீடித்து நிலைக்க கூடியவர் முதல்வர் என்று தெரிவித்தார். ஒரு போன் சிறந்த போனாக இருக்க அதன் மதர்போர்ட் சிறந்ததாக இருக்க வேண்டும் அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மதர் போர்டாக இருந்து இவரை உருவாக்கியதால் அவர் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்றார்.