ADVERTISEMENT

"நான் அடிக்கடி பயன்படுத்தும் கெட்டவார்த்தை..." - 'ப்யார் ப்ரேமா காதல்' ரைஸாவுடன் ஜாலி பேட்டி!

06:59 PM Aug 11, 2018 | tarivazhagan

பிக்பாஸில் சைலண்ட் அட்ராக்ஷனாக இருந்தார் ரைஸா வில்சன். ஓவியா ஒரு பக்கம் ஸ்கோர் பண்ணினார், ஆர்மியெல்லாம் அமைந்தது. ஜூலி மறுபுறம் ஸ்கோர் பண்ணி படமெல்லாம் நடிக்கத் தொடங்கினார். ஆரவ் வின்னர் ஆனார்... இவர்கள் அனைவரையும் ஓவர்டேக் பண்ணிவிட்டு 'ப்யார் ப்ரேமா காதல்' என வைரல் ஆகியிருக்கிறது ஹரிஷ் கல்யாண் - ரைஸா ஜோடி... ரைஸாவை சந்தித்தோம்...

ADVERTISEMENT

ADVERTISEMENT

உங்க பெயருக்கு என்ன அர்த்தம்?

தெரியல, எங்க அப்பாகிட்டதான் கேட்கணும். நானும் ஏன் இந்த பெயர் வச்சாங்கன்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன்.

இப்போ பிக்பாஸ் வீட்டில் இருக்கிறவங்க ஃபேக்கா இருக்காங்கனு நிறைய பேர் சொல்றாங்க, ஆனா நீங்க இருக்கும் போது அப்படி இல்லை, இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

என்னைக் கேட்டா ஃபேக்கா இருக்காங்கனு சொல்லமாட்டேன். நாங்க போகும் போது எதுவும் தெரியாம போயிட்டோம். அவங்க கொஞ்ச முன்னேற்பாடோடு போயிருக்காங்க. இதுதான் எங்களுக்கும் அவுங்களுக்கும் வித்தியாசம். அது மனிதனோட இயற்கை குணம் .

பிக் பாஸ் வீட்டில் இருந்த ஹரிஷ் கல்யாணுக்கும் இங்க இருந்த ஹரிஷ் கல்யாணுக்கும் என்ன வித்தியாசம் பார்த்தீங்க ?

நிறைய இருக்கு. நான் அங்க அவர் கூட ஒரு வாரம்தான் இருந்தேன். அப்பறம் நான் வெளிய வந்துட்டேன். என்னை பல சீன்களில் பாராட்டினார். இந்தப் படத்துக்கு ஹீரோ ஹரிஷ் கல்யாண்தான்னு சொன்னதும், தெரிஞ்ச நபர் என்பதால் சந்தோசப்பட்டேன். எனக்கும் ஹரிஷுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். அதை நீங்களே ஃபீல் பண்ணுவீங்க.

இந்தப் படத்துக்காக என்னவெல்லாம் பண்ணீங்க?

நிறைய பண்ணேன், டான்சிங் கிளாஸ், வாய்ஸ் மாடுலேஷன் கிளாஸ், ஆக்ட்டிங் கிளாஸ்... இதெல்லாம் பண்ண பிறகுதான் எனக்கு நம்பிக்கையே வந்தது. பிக்பாஸ் வீட்டில் தமிழில்தான் பேசணும் அப்படின்றது இந்த படத்தில் ரொம்ப உபயோகமா இருந்துச்சு. ஆனா நான் டப்பிங் பண்ணல, அதனால் அதுல பிரச்சனை பெருசா இல்லை. ஆனா சுத்தி இருக்கவங்க கூட பேச ரொம்ப உபயோகமா இருந்துச்சு.

இதற்கு மேல் ரொம்ப சீரியஸா பேசவேண்டாமென்று முடிவெடுத்து சில ஜாலி கேள்விகளை கேட்டோம். எதைக் கேட்டாலும் கூலாக பதில் சொன்னார் ரைஸா.

ரைசா பற்றி என்ன மாதிரி காஸிப்ஸ் வரணும் ?

நான் யாரையாவது 'டேட்' பண்றேன்னு சொல்லுங்க.

உங்களுக்கு பிடிச்ச ஐந்து விஷயம் ?

வேலையை ஸீரியஸா எடுத்து பண்றவங்களை பிடிக்கும்

ஓப்பன் மைண்டடா இருக்கணும்

மத்தவங்களை பாராட்டுவது பிடிக்கும்

அமைதியா இருக்கணும்

எப்பவும் சாந்தோஷமா இருக்கனும்... இதெல்லாம் எனக்குப் பிடிக்கும்

பிடிக்காத ஐந்து விஷயம்?

எப்பவும் கம்பளைண்ட் பண்ணிட்டே இருக்கிறவங்க

மத்தவங்கள பாராட்டாம இருக்கிறவங்க

ஹைப்பரா (அதீத உணர்ச்சிவசம்) இருக்கிறவங்க

தலைக்கனத்தோடு இருக்கிறவங்க

அவ்ளோதான்... வேற இல்லையே...

நீங்க அதிகமா உபயோக படுத்துற 'பேட் வார்ட்' எது ?

நிறைய இருக்கு... அதெல்லாம் இப்போ வேண்டாம்.

ரைசாவுக்கு எப்போ கோபம் அதிகமா வரும்?

பசிச்சா, அப்பறம் யாராவது இரிடேட் பண்ணா...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT