Skip to main content

“பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்”- மாஸ் காட்டிய இயக்குனர் கரு. பழனியப்பன்

வரலாறு என்றாலே போர் அடிக்கிறது என்கின்ற காலம் மாறி. வேறு வழியின்றி வரலாறு கற்க வேண்டும் என்கின்ற காலமாக படிப்படியாக மாறிக்கொண்டிருக்கிறது நமது இந்திய மக்களின் மனநிலை. காவிகளின் ஆதிக்கமும் அவர்களின் அடக்குமுறையும். சாதிய பாகுபாடும், மதம் ரீதியான வரலாற்று மற்றும் சித்தாந்த தாக்குதல்களுமே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இப்படியாக வரலாற்றை மீட்க வேண்டும் என்று பல தரப்பட்ட தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும் புத்தகம் வாயிலாகவும், ஊடகம் வாயிலாகவும், வரலாறு சார்ந்த இடங்களுக்கு நேரில் சென்று படிப்பதுமென வரலாற்று கல்வி பணிகளை மேற்கொள்கின்றனர். அதன் பகுதியாக மதுரையை சேர்ந்த மூத்த வழக்கறிஞரான தி. லஜபதி ராய் அவர்கள் “நாடார் வரலாறு கருப்பா....காவிய....” என்கின்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி மதுரை தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்படக் கூடாது என்று வழக்குகள் தொடுக்கப்பட்டன. இறுதியில் மதுரை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது.  இதில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, சுப. உதயகுமார், இயக்குனர் அமீர் மற்றும் கரு. பழனியப்பன், பேராசிரியர் அ. மார்க்ஸ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

karupalaniappan director

இதில் நூலினை பெற்றுக்கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை “நான் சாதியை ஆதரிப்பவள் இல்லை” என்று கூறி நாடர்கள் பற்றிய சிறு வரலாற்று சுருக்கத்தை பகிர்ந்தார்அடுத்ததாக பேசிய இயக்குனர் கரு. பழனியப்பன் தனக்கான சீற்றம் பொருந்திய பேச்சினை கொண்டு மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுத்தார் அவர் ”காவிகள் தொடர்பாக எப்போதெல்லாம் எங்கெல்லாம் சான்ஸ் கிடைக்கிதோ அப்போதெல்லாம் நான் மறக்காம பதிவு செஞ்சிடுவேன் ” என்று தொடக்கத்திலேயே தனது காவி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். நடந்து முடிந்த இஷா யோகா மையத்தின் சிவ ராத்திரி குறித்து “எங்களை போன்ற சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களின் விழாக்களுக்கு அனுமதி கேட்டால் மறுக்கப்படும் நிலையில், பல ஹெக்டேர் யானை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவா ராத்திரி நிகழ்ச்சிக்கு நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி வருகை தருகிறார்” மேலும் “இயற்கை பேரிடரை பார்வையிட வராத மோடி தேர்தல் நெருங்கும் வேலையில் மாசத்திற்கு இரண்டு முறை வருவது” ஏற்றுகொள்ள முடியாது என்றார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி குறித்து பேசிய அவர் “இந்து மத பிரதிநிதி என்று கூறும் அனைவரும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் தான். இப்போவே திவாலான மேலும் திவலாகக்கூடிய கம்பெனியில தெரிஞ்சே சீட்டு கட்டுவோமா. அதே தான் திரும்பவும் பி.ஜே.பி-க்கு வோட்டு போடாதிங்க, பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்” என்றார் அழுத்தமாக. “நமகெல்லாம் ஸ்லீப்பர் செல்ஸ் பி.ஜே.பி-லையும் இருக்காங்க, தமிழிசையும், பொன்னாரும். எப்போவுமே பொன்னார் சுப்ரமணிய சுவாமியா ஆக முடியாது, அதே தான் தமிழிசையும் நிர்மலா சீதாராமனா ஆகா முடியாது. ஒரு நாள் இந்த பிரச்சன கிளம்பும் அப்போ அவங்க தான் நம்ம ஸ்லீப்பர் செல்ஸ்” என்று தனது உரையை சாதிய எதிர்ப்புடன் முடித்துக்கொண்டார். 


தொடர்ந்து பேசிய பேராசிரியர் மார்க்ஸ் மற்றும் இயக்குனர் அமீர் “ மத வெறுப்பையும், மத வெறியையும் தூண்டும் இயக்கமே ஆர்.எஸ்.எஸ் அதனுடைய அஜெண்டாவிற்கு நம்மை அறியாமலேயே தள்ளப்படுகிறோம், மீண்டும் ஒரு இந்து ராஜ்யத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்- இன் நோக்கம். அவர்கள் இந்து மதத்தில் உள்ள சாதியையோ, வர்ணத்தையோ எதிர்கவில்லை” என்றார் மார்க்ஸ் தற்போதைய தி.மூ.க-வின் நிலை குறித்து கூறிய இயக்குனர் அமீர் “சமூக நீதியை வெளிக்கொண்டு வந்ததில் பெரும் பங்கு தி.மூ.க-விற்கு உள்ளது. சாதி இல்லை என்று பேசிய பெரியாரிசத்தின் கிளையான தி.மூ.க தொகுதிக்கான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் போது வேறு வழியின்றி சாதிவாரியான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளபட்டிருப்பது வருத்தமளிக்கிறது, வெளி நாடுகளில் இந்தியா காந்தியின் நாடு என்று தான் அறியப்படுகிறது. அனால் இங்கோ பட்டேல் இன மக்களின் வாக்குகளை பெறுவதற்கு 3000 கோடிக்கு சிலை வைக்கும் அவல நிலையில் இந்திய உள்ளது” என்றார் ஆதங்கத்துடன். மேலும் “காந்தியை கொன்ற கோட்சேவை நினைவில் கூறவாவது அனைவரும் காந்தியின் நினைவு நாளை கொண்டாட வேண்டும்” என்றார் அமீர் இறுதியாக நூலாசிரியர் தி. லஜபதி ராய் அவர்கள் தனது நூலை பற்றி பேசிவிட்டு “காவி வரலாறு அடிமைப்படுத்தும். அதனால் நம்முடைய வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்” என்று சுருக்கமாக முடித்துகொன்டார். நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் தமிழ் சாரலோடு நிறைவுற்றது நிகழ்ச்சி 

- அஹமத்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்