ADVERTISEMENT

சோதனை என்ற பெயரில் நடிகர் விஜயை வீட்டுச்சிறையில் வைத்தார்கள் - இடும்பாவனம் கார்த்திக் பேச்சு!

11:39 PM Feb 11, 2020 | suthakar@nakkh…

சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுடைய காரில் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

நடிகர் விஜய், பைனாஸ்சியர் அன்புச்செழியன், பிகில் பட தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்றது. நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் அவருடைய காரிலேயே சென்னை அழைத்து வந்தனர். இந்த சம்பவம் தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உங்களுடைய கருத்து?

வருவானவரிச் சோதனைகளை பற்றி நாம எதுவும் பேசுவதற்கில்லை. ஆனால் வருமான வரிச்சோதனையில் பின்னால் இருக்கும் அரசியலை நாம் பேச வேண்டியுள்ளது. வருமான வரித்துறை தன்னிச்சையான அமைப்பு என்று சொல்லப்படுகின்றது. அப்படி தன்னிச்சையான அமைப்பாக இருந்தால் அதன் சோதனை யாருக்கும் சார்பில்லாமல் இருக்க வேண்டும். விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தினீர்கள் என்றால் அவர் தன் மீது தவறில்லை என்றால் அதை அவர் நிரூபிப்பார். ஆனால் இந்த சோதனையின் பேரில் அவரை தற்போது நடத்தியவிதம் கண்டிக்கத்தக்கது. அவரை ஏதோ குற்றவாளிகளை நடத்துவதை போல் நடத்தினார்கள். அவர் என்னவோ கொலை, கொள்ளை செய்தது போல அவரை தேவையில்லாமல் இம்சித்தார்கள். அவரிடம் வருமானவரிச் சோதனை செய்ய வேண்டுமானால் அவரின் வீட்டிற்கு சென்றிருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அவருடைய படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது. பணம், நகைகளை அவர் படப்பிடிப்பு தளத்திற்கா எடுத்து சென்றுள்ளார். அவரை பெரிய குற்றவாளிகளை போல சித்தரித்து வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளார்கள். இவரை வீட்டு சிறையில் வைத்ததை போன்ற நிகழ்வை அவர்கள் உண்டாக்கினார்கள். இன்றைக்கு எங்கு சோதனை நடைபெற்றாலும் சோதனைக்கு உள்ளாகுபவரின் இயல்பு வாழக்கை முடங்காதவாறு சோதனை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

ஆனால் அவர் சொல்லியபடி விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றதா என்றால் இல்லை. வீட்டில் சிறைவைத்தது போல அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றது. வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகள் இன்று மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்து வருவதாக முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவே தெரிவித்துள்ளார். வருமானவரித்துறை நேர்மையாக செய்படுவதாக சொல்லும் இன்றை மத்திய அரசு, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் வருமானம் ஒரு ஆண்டில் 16000 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகிறார்களே, அங்கே ஏன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. அங்கே வருமானவரித்துறை அதிகாரிகள் ஒப்புக்காகவாது சோதனை நடத்தியிருக்கலாம் அல்லாவா? ஏன் சோதனை நடத்தவில்லை. பாஜகவை ஆதரிப்பவர்கள் யார் மீதாவது வருமானவரித்துறை வழக்கு பதிவு செய்துள்ளாதா? சேகர் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தார்கள். ஆனால் தற்போது அந்த வழக்கின் கதி என்ன. அந்த வழக்கையே கைவிட்டுவிட்டார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினார்கள். என்ன நடந்தது, எதுவும் நடக்கவில்லை. வருமானவரித்துறை என்பதை பழிவாங்குவதற்கும், தன்னை பிடிக்காதவர்களை மிரட்டுவதற்கும் மட்டுமே மத்திய அரசு பயன்படுத்துவதாக நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். இந்த வரிமானவரித் சோதனை என்பதே எங்களை எதிர்த்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்பதை சொல்லாமல் சொல்வதற்குத்தான் இந்த சோதனை என்ற பூச்சாண்டியை தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது காட்டுகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT