ADVERTISEMENT

ராஜாஜி ஹாலில் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு எப்படி???

06:38 PM Aug 11, 2018 | kamalkumar

ADVERTISEMENT


திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வந்தார். அச்சமயத்தில் வி.ஐ.பி வழியில் பொது மக்கள் சூழ்ந்துவிட்டனர். இதன் காரணமாக ராகுல் காந்தி அந்த மக்கள் கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டு அரைமணிநேரத்திற்கு எங்கையும் நகரமுடியாமல் தவித்தார். தமிழக காவல்துறை முழுப்பாதுகாப்பு அளிக்க வேண்டிய இறுதிசடங்கான கலைஞரின் இறுதிச்சடங்கிற்கு பிரதமர் மோடி வந்துவிட்டு சென்றபின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக சொல்கின்றனர். இதனால்தான் ராகுல் காந்தி வி.ஐ.பி வழியில் வந்தும் மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டார். அப்போது பாதுகாப்பிற்காக இரண்டே இரண்டு தமிழக காவல்துறையினர்மட்டும் தான் உடன் இருந்தனர். அதுபோக எப்போதும் ராகுல் காந்தி பின்னே சபாரி சூட்டுகள் போட்டுகொண்டு இருக்கும் சிறப்பு பாதுகாப்புப்படையினர்தான் அக்கூட்டத்திலும் அல்லோலப்பட்டு அவருக்கு பாதுகாப்பு அளித்தது. ராகுல் காந்தி கூட்டத்தில் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்ததும், அப்போது அவருடைய சிறப்பு பாதுகாப்பு படையால் கூட அவருக்கு பாதுகாப்பு ஒழுங்காக அளிக்கமுடியாமல் சிரமப்பட்டதையும் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், என்னதான் சிரமமாக இருந்தாலும் கூட்டத்திலும் அவரின்மேல் துரும்பு கூட படாமல் பாதுகாத்தது அந்த z+ சிறப்பு பாதுகாப்பு படை.

ADVERTISEMENT


இந்தியாவில் தனிநபர் ஒருவருக்கு சிறப்பு பாதுகாப்பு படை, பாதுகாப்பு அளிக்கின்றது என்றால் அவருக்கு அச்சுறுத்தல் எவ்வளவு இருக்கிறது என்பதை பொறுத்து எஸ்பிஜி, என்எஸ்ஜி, ஐடிபிபி, சிஆர்பிஎப் போன்ற நிறுவனங்கள் அவர்களுக்கான பாதுகாப்பு தரத்தை நிர்ணயிக்கிறது. பிரதமர், குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்களுக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் இருந்து பாதுகாப்பு தரப்படுகிறது. இவர்கள் மட்டும் அல்லாமல் இந்தியாவின் முக்கிய பிரபலங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொறுத்து சிறப்பு பாதுகாப்பது அளிக்கப்படுகிறது. சிறப்பு பாதுகாப்பு படைகள் z+, z, y, x என்று நான்கு வகைகளாக இருக்கிறது. இதில் z+ சிறப்பு பாதுகாப்புபடைதான் மிகவும் பலமானது, உயர்ந்தது. ஒருவரின் உயிருக்கு எவ்வளவு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை பொறுத்து இதுபோன்ற பாதுகாப்புப்படையில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்கின்றனர். முன்னாள் தமிழக முதல்வராக இருந்த கலைஞருக்கும் சிறப்பு பாதுகாப்பு படையான z+ தரவரிசை படைதான் பாதுகாப்பு அளித்தது. தற்போது அவரது மறைவை அடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட z+ பாதுகாப்புபடை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது என்று அறிக்கையும் வந்துவிட்டது. அதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இது வழங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் z+ பாதுகாப்பில் 17 பேர் வரை இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இருக்கின்றனர். இந்த z+ பாதுகாப்பில் அப்படி என்ன வசதி இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். இந்த பாதுகாப்பின் கீழ் உள்ளவர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் அவர்களுடன் சென்று பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும், இந்த படையில் 55 பாதுகாப்பாளர்கள் இருக்க அதனுள் 10 என்எஸ்ஜி கமாண்டோக்கள் இருப்பார்கள், மற்றவர்கள் எல்லாம் காவல்துறைக்காரர்கள். என்எஸ்ஜி என்பது பிளாக் கேட் என்று அழைக்கப்படும் பாதுகாப்பு கமாண்டோ படைதான். இவர்கள் பாதுகாப்பது அளிப்பதற்காக புதிதுபுதிதாக வந்திருக்கும் ஆயுதங்களை கூட வைத்திருக்கும் அளவிற்கு செல்வாக்கு உண்டாம்.

z பாதுகாப்பு, இது z+ க்கு அடுத்தபடியான பாதுகாப்பு சினிமா நட்சத்திரங்கள் முதல் இந்திய பிரபலங்கள் பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் 22 பாதுகாப்பாளர்கள் இருப்பார்கள் அதனுள் 5 என்எஸ்ஜி கமாண்டோக்கள் உண்டு. ஐடிபிபி அல்லது சிஆர்பிஎப் போன்ற அமைப்புகளில் இருந்து இந்த பாதுகாப்புப்படைக்கு ஆட்கள் அனுப்பப்படுகிறது. மேலும் ஒரு காரும் தரப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரம் அமீர் கான் மற்றும் யோகா குரு ராம் தேவ் ஆகியோருக்கு இந்த z பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதாம். y பாதுகாப்பு, இது இந்திய சிறப்பு பாதுகாப்பில் மூன்றாம் கட்ட பாதுகாப்பு படை. இதில் மொத்தம் 11 பேர் பாதுகாப்பளிக்க இருக்கிறார்கள். அதனுள் ஒன்று அல்லது இரண்டு என்எஸ்ஜி கமாண்டோக்கள் இருப்பார்கள். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பு அளிக்கிறது இந்த z சிறப்பு படை. x படை, இதுதான் நான்காம் கட்ட சிறப்பு பாதுகாப்பு படை. இதில் அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு ஆயுதம் ஏந்திய இரண்டு காவலர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். இந்த பாதுகாப்பு படை தேவைப்படும் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறது.


இந்த சிறப்பு பாதுகாப்பு படைகளையும் தாண்டி, எஸ்பிஜி என்னும் ஒரு பாதுகாப்பு படை இந்திய பிரதமருக்காகவும், முன்னாள் இந்திய பிரதமருக்காகவும் அளிக்கப்படுகிறது. பிளாக் கேட்ஸ் என்று சொல்லப்படும் என்எஸ்ஜி பாதுகாப்பு அமைப்பு பலர் இதில்தான் இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை சம்பவத்திற்கு அடுத்து இந்த எஸ்பிஜி சோனியா காந்தி மற்றும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT