Rahul Gandhi, Sonia Gandhi paid tribute on the kalaignar memorial day

முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் பேனர்கள் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கிருந்து முதல்வர் தலைமையில் தொடங்கிய அமைதிப் பேரணி கலைஞர் நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் என முக்கியநிர்வாகிகள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

இந்த நிலையில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் டெல்லியில் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அவர்களுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.