ADVERTISEMENT

நமது மக்களவை உறுப்பினருக்கு தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியாக மத்திய அரசு எவ்வளவு ரூபாய் ஒதுக்கியது !

03:14 PM Mar 26, 2019 | Anonymous (not verified)

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளில் உள்ள மக்கள் நமது மக்களவை உறுப்பினருக்கு தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி எவ்வளவு மத்திய அரசு ஒதுக்கியது ? எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ? உள்ளிட்ட விவரங்களை வீட்டிலிருந்தவாறே இணையதளம் மூலம் கண்டறியலாம். மக்களவையில் உள்ள மொத்த 543 உறுப்பினர்களும் தொகுதி மேம்பாட்டு நிதி எவ்வளவு மத்திய அரசு ஒதுக்கியது ? எந்த வருடத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கியது ? தொடர்பான முழு விவரங்களும் வீட்டில் இருந்தவாறே மக்கள் அனைவரும் அறியலாம். மேலும் மாநிலங்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 ஆகும். இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர் .

ADVERTISEMENT



அதே போல் ராஜ்ய சபா உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதிக்கு எவ்வளவு ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது ? என்பதை இணையதளம் மூலம் அறியலாம். இதற்கான இணையதள முகவரி : https://www.mplads.gov.in/mplads/Default.aspx ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று Options "FUND RELEASE STATEMENTS" , "EXPENDITURE REPORT" , "PRIORITY SECTOR REPORTS" உள்ளிட்ட Option -யை பயன்படுத்தி தங்கள் தொகுதிக்கு எவ்வளவு நிதியை மத்திய அரசு ஒதுக்கியது என்பதை எளிதில் அறியலாம். உதாரணமாக தற்போதைய சேலம் மக்களவை உறுப்பினராக திரு.வி. பன்னீர்செல்வம் உள்ளார். இவருக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக 2014- 2019 நிதி ஆண்டின் கீழ் மத்திய அரசு ரூபாய் 25 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. மேலும் தமிழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.க.கனிமொழி (சென்னை) அவர்களுக்கு 2007-2017 நிதி ஆண்டின் கீழ் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியாக 34.5 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்ற முழு தகவல் இந்த இணையதளத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து முந்தைய 2009-2014 தொகுதி வளர்ச்சி நிதி தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளத்திற்கு சென்று அறியலாம்.

ADVERTISEMENT

பொதுமக்கள் ஏன் தங்கள் மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதி விவரங்கள் அறிய வேண்டும் ?

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகளுக்கும் மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி வழங்கி வருகிறது. இதன் மூலம் சமந்தப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கலாம். அவ்வாறு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்யாதப்பட்சத்தில் மக்கள் இந்த இணைதளத்தை : https://www.mplads.gov.in/mplads/Default.aspx பயன்படுத்தி தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து சமந்தப்பட்ட தொகுதி உறுப்பினர்களிடம் கேட்கலாம்.

இது போன்று மக்கள் உறுப்பினர்களிடம் கேள்விகளை கேட்க தொடங்கினால் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி சமந்தப்பட்ட தொகுதி உறுப்பினர் முழுமையாக தங்கள் தொகுதியில் வளர்ச்சியை காணலாம். எனவே கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணையதளம் மூலம் இன்றே கண்டறியுங்கள் உங்கள் மக்களவை தொகுதிக்கு எவ்வளவு நிதி
மத்திய அரசு ஒதுக்கியது ? இந்த நிதியை செலவிடப்படவில்லையா? மக்களவை உறுப்பினரை நேரில் சந்தித்து கேள்வி எழுப்புங்கள் ? மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கினால் நமது தொகுதிகள் ஒவ்வொன்றும் வளர்ச்சி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


பி . சந்தோஷ் , சேலம் .

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT