ADVERTISEMENT

தமிழகத்தில் உலாவும் வெளிநாட்டினர்... கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு... வெளிவந்த EXCLUSIVE அதிர்ச்சி தகவல்!

01:43 PM Apr 02, 2020 | Anonymous (not verified)


ந்தியாவிற்கு கொரோனா நோய் வந்ததற்கு காரணம் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள்தான். இந்நிலையில் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் வெளி நாட்டினர் இன்றும் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். அவர்களில் பலரிடம் கொரோனாவை உறுதி செய்யும் சோதனைகூட நடத்தப்படவில்லை. தமிழகத்திலும் இதே நிலை என்ற அதிர்ச்சித் தகவலை நக்கீரன் தனது சிறப்பு புலனாய்வின் மூலமாகக் கண்டுபிடித்துள்ளது.

ADVERTISEMENT


ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். 2000 ரூபாய் வசூலிக்கும் ஓட்டல் கூட இந்தக் காலக்கட்டத்தில், 20 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கும். இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் பல கூட்டங்களில் பங்கெடுப்பார்கள்.1926 முதல் இயங்கும் தப்லிக் ஜமாத் என்கிற இஸ்லாமிய தொண்டு நிறுவன அமைப்பு டெல்லியில் கடந்த மார்ச் 23 அன்று பெரிய மாநாடு ஒன்றை நடத்தியது.அந்த மாநாட்டில் 250 வெளிநாட்டுக் காரர்கள் கலந்து கொண்டனர். இதுதான் இந்தியா வில் கொரோனா தொற்றுக்கான அடிப்படை என்கிறது மத்திய அரசு.மாநாட்டில் பங்கேற்ற சிலர் தமிழ்நாட்டிற்கும் வந்தனர்.அவர்கள் மூலமாக ஈரோட்டிலும், கோயம்புத்தூரிலும் கொரோனா தொற்று பரவியது.அதேபோல் துபாய் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக கொரோனா நோய் பெரிய அளவிற்கு இந்தியாவில் பரவியது.

இந்த நிலையில் சைனாவில் கொரோனா தீவிரமாகப் பரவியதின் விளைவாகச் சர்வதேச நாடுகள் அனைத்தும் வெளிநாட்டு விமானங்களையும் அனுமதிக்க மறுத்தது.இதனால் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா விசாவுடன் இந்தியாவுக்கு வந்தவர்கள் தேங்கிப்போயினர்.ஒவ்வொரு நாளும் தங்கள் நாட்டு பிரஜைகளை மட்டும் அழைத்துச் செல்ல விமானங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தன. இதில் பல நாடுகள் இந்தியாவிற்கு விமானங்களை அனுப்புவதில்லை.அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.இந்தியாவில் முடங்கிப் போயினர்.கொரோனா அதிகம் பாதித்த இத்தாலி,ஸ்பெயின்,ப்ரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை.இவர்களில் பலர், பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கு வந்தவர்கள்.அதே பிப்ரவரி மாதத்தில் வந்த துபாய் நாட்டுடன் தொடர்புடையவர்கள் மூலமாகத்தான் இந்தியாவிற்கு கொரோனா பரவியது.

ADVERTISEMENT


கொரோனா பரவிய காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து திரும்பிச் செல்லாத பலர்,தமிழகத்தின் பல சுற்றுலாத் தளங்களில் சுற்றித்திரிகிறார்கள். அவர்களுக்கு கோவிட்19 பரிசோதனை செய்யப்படவில்லை. அவர்களது இருப்பு கொரோனா நோய் பரவும் என்கிற அச்சத்தை எங்களுக்கு ஏற்படுத்துகிறது என நக்கீரனுக்கு தகவல் வந்தது.

தமிழகத்தின் மிகப்பிரபலமாக சுற்றுலா நகராமான மாமல்லப்புரத்தில் வெளிநாட்டினர்களின் வருகை எப்படி இருக்கிறது என அறிய நக்கீரன் களம் இறங்கியது.மாமல்லபுரத்தை நெருங்கி அங்கிருக்கக்கூடிய மக்களைக் கேட்டபோது, இங்கே 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சுற்றித் திரிகிறார்கள் எனச் சொன்னார்கள்.மிகவும் ரகசியமாக தங்க வைக்கப்பட்ருக்கும் அவர்களை அந்தப் பகுதியில் லாட்ஜ் நடத்தும் உரிமையாளர்கள் பாதுகாக்கிறாக்ரள் என்றும் சொன்னார்கள்.


மாமல்லபுரத்தில் கடற்கரையையொட்டி தங்கும் விடுதிகள் அமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகம் தரும் விளையாட்டுகள் மற்றும் உணவுப் பொருள்கள், கலைப் பொருள்கள் இவற்றை வழங்கும் விடுதிகள் அமைந்துள்ள இடம் ஒத்தவாடை தெரு.அந்த தெருவுக்குள் நாம் நுழைந்தபோதே ஒரு வெளிநாட்டு பெண்மணி சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அவரை அணுகி நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனக் கேட்டபோது,சீனா என்றார்.எப்போது வந்தீர்கள் என்று கேட்டதற்கு,பிப்ரவரி மாதம் என்றார்.நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

உங்களுக்கு கோவி 19 பரிசோதனை செய்யப்பட்டதா? எனக் கேட்டதற்கும் அவர் பதில் சொல்லவில்லை.அவருடன் வந்த இந்தியரான ஒரு டூரிஸ்ட் கைடு,நம் கேள்விகளைத் தவிர்த்து அவரைக் காப்பாற்றி அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தார்.

நாம் கடற்கரையை அடைந்தோம். அங்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.அவர்களைப் படம் எடுத்துக் கொண்டு புலனாய்வை மேலும் அதிகப்படுத்தினோம். கிரீன் வுட் ரிசார்ட்டின் உரிமையாளரான சிந்துவிடம் இங்கு வெளிநாட்டினர் யாராவது தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என்று கேட்டோம். நீண்ட தயக்கத்திற்குப் பிறகு அர்ஜண்டீனாவைச் சேர்ந்த பாப்லே, ரஷ்யாவைச் சேர்ந்த ஈகிதா ஆகியோர் அவரது ரிசார்ட்டில் இருக்கிறார்கள் என ஒத்துக் கொண்டார்.

நாம் அவர்களைச் சந்திக்க வேண்டும்.அவர்களுக்கு கோவிட்19 பரிசோதனை செய்யப் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டோம். அதற்கு மாமல்லபுரம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் வந்து அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினார்.

நாம் வற்புறுத்தியதன் பேரில் நீண்ட முயற்கிக்குப் பிறகு பாப்லோவும்,ஈகிதாவும் நம்மிடம் பேசினார்கள்.பல்லோ அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர். அவர் கொரோனா பாதித்த பிப்ரவரி மாதம்தான் தமிழகத்திற்கு வந்துள்ளார்.அவருடன் பயணம் செய்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஈகிதாவுடன் அவர் மாமல்லபுரம் வந்தார். அங்கிருந்து எத்தி யோப்பியன் ஏர்லைன்ஸ் மூலமாக அந்நாட்டின் தலைநகரான அடீஸ் அபாபாவுக்குச் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு போய், பின்னர் அர்ஜென்டினாவிற்கு செல்வதுதான் பாப்லோவின் திட்டம்.



இதை நம்மிடம் விளக்கிய அவர், கொரோனாவினால் ஆஸ்திரேலியா தனது வான் வழியை மூடிவிட்டதால் நான் இங்கே மாட்டிக்கொண்டேன்.அதேபோல் டெல்லி வழியாக ரஷ்யாவுக்குச் செல்ல நினைத்த ஈகிதாவும் மாட்டிக்கொண்டார்.நாங்கள் இங்கே தங்கியிருக்கிறோம்.எங்களை ஆம்புலன்ஸில் அழைத்துக்கொண்டு போய் எங்களுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று அதிகாரிகள் சோதனை செய்து, வெளியே வரக்கூடாது என்கிற கட்டுப்பாடு விதித்தார்கள்.நாங்கள் இங்கேயே இருக்கவேண்டும் என்றார்கள்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு தங்கி இருக்கிறார்கள் என்பதை ஒரு நோட்டீஸ் மூலம் அரசு அறிவிக்க வேண்டும்.அது போல எந்த அறிவிப்பும் பாப்லோ மற்றும் ஈகிதா தங்கியிருந்த ரிசார்ட் வாசலில் ஒட்டப்படவில்லை.நடிகர் கமலஹாசன் வீட்டிலேயே நடிகை கவுதமி வெளியூர் சென்று வந்தார் என்ற காரணத்திற்காக நோட்டீஸ் ஒட்டிய தமிழக சுகாதாரத்துறை இரண்டு வெளிநாட்டினர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் ஏன் நோட்டீஸ் ஒட்டவில்லை என ரிசார்ட்டின் நிர்வாகியான சிந்துவிடமும் கேட்டோம்.

அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்.அதனால் அவர் தினமும் அழுதுகொண்டிருக்கிறார். அவர்களுக்கு நாங்கள்தான் சாப்பாடு தருகிறோம் என சோகக்கதை சொன்னாரே தவிர, கோவிட்19 இல்லை என்பது உறுதி செய்யப் பட்டதா அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்களா என்பதற்கான பதில் கிடைக்கவில்லை.

அடுத்தபடியாக நாம் சென்ற இடம் யோகி ரெஸ்டாரெண்ட் அண்டு ரிசார்ட். இதை ஜெனட் என்கிற ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி நடத்துகிறார்.இந்தியர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஓட்டல் நடத்துகிறார்.அவரது வீடு கடற்கரைக் குப்பக்கத்தில் அமைந்திருந்தது.அங்கு கணவன் மனைவி, குழந்தை ஆகிய மூன்று வெளிநாட்டினர்கள் இருந்தார்கள்.அதுபற்றி ஜெனட் நம்மிடம் விளக்கியபின் அவர்களைச் சந்தித்தோம். ஆண் பயணியின் பெயர் வெனிஸ்தா அரிஸ் டோவ் (veentista, haristov),, பெண்ணின் பெயர் பென்சியா (benzia),, அவர்களது குழந்தையின் பெயர் கிருஷ்ணா, (kirisna)இவர்கள் பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

நாங்கள் இந்திய ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்கள்.மகனுக்கு கிருஷ்ணா எனப் பெயர் வைத்தோம். அந்தமான் தீவுகளுக்கு வந்து அங்குள்ள காடுகளுக்குச் சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுபவர்கள். கொரோனா பாதிப்பதற்கு முன்பே வந்துவிட்டோம்.எங்களால் திரும்பிச் செல்ல முடியாமல் தங்கியிருக்கிறோம். எங்களைச் சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்துக் கொண்டுபோய் ஜுரம் இருக்கிறதா என சோதனை செய்தார்கள்.அதற்குப் பிறகு யோகி ரிசார்ட்டில் தனிமை யில் இருக்க சொல்லியிருக்கிறார்கள். அதற்கான ஸ்டிக்கரையும் யோகி ரிசார்ட் வாசலில் ஒட்டியிருக்கிறார்கள் என விளக்கினார்கள்.

அப்பகுதி பொதுமக்களோ, யோகி ரிசார்ட்டில் தங்கியிருந்த பல்கேரியா நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டினர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள் என ஸ்டிக்கர் ஒட்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள், கிரீன்வுட் ரிசார்ட்டில் இருந்த வெளிநாட்டினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என ஏன் ஸ்டிக்கர் ஒட்டி அறிவிக்கவில்லை? அதே தெருவில் இருக்கக்கூடிய லட்சுமி லாட் ஜிலும் வெளிநாட்டினர்கள் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நடமாட்டத்தால் எங்களுக்கு கொரோனா வந்துவிடுமோங்கிற பயம் இருக்கு. நாங்கள் அந்தப் பக்கமே போவதில்லை என வருத்தப்பட்டார்கள்.

பாஜக பிரமுகருக்கு சொந்தமான லட்சுமி லாட்ஜுக்குச் சென்று அங்கிருந்த நிர்வாகியிடம் கேட்டோம்.அவர் வெளிநாட்டினர் யாரும் இங்கே இல்லை என மறுத்தார்.அதேபோல் கலெக்டர் பங்களா என அழைக்கப்படும் லாட்ஜிலும் பிரபல அதிமுக பிரமுகரான மீன்குழம்பு கணேசனுக்கு சொந்தமான ஸீ ப்ரீஸ் ஓட்டலுக்கும் சென்று வெளிநாட்டினர் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்தோம். அவர்களும் இல்லை என மறுத்தார்கள்.

மாமல்லபுரம் மட்டுமல்ல, கோடை வெப்பம் நிலவும் கேரளாவைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் தங்கியிருக்கிறார்கள்.அவர்களையெல்லாம் அந்தந்த மாநில அரசுகள் கோவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தியிருக்கிறார்கள்.

கோவாவில் உள்ள வெளிநாட்டினருக்கு கோவிட்19 பரிசோதனை செய்து முடித்ததாக கோவா அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டினருக்கு வெறுமனே இருமல், சளி இருக்கிறதா எனப் பரிசோதனை மட்டுமே செய்யப் பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் எத்தனை வெளிநாட்டினர்கள் இருக்கிறார்கள் எனக் காவல்துறை வட்டாரங்களைக் கேட்டபோது, யோகி ரெஸ்டாரெண்டில் இருக்கக்கூடிய பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்கிறார்கள்.நாம் பார்த்த வகையில் சுமார் 15 பேர் மாமல்லபுரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? அவர்கள் மூலம் கொரோனா பரவுமா என்கிற கேள்விகளுக்குத் தமிழக அரசு வட்டாரங்களில் பதில் இல்லை.

படங்கள் : ஸ்டாலின்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT