ADVERTISEMENT

மேட்டுக்குடி பெண்கள் என்றால் துப்பாக்கிச்சூடு... தாழ்த்தப்பட்ட பெண்கள் என்றால் மிரட்டலா..? - எவிடென்ஸ் கதிர் காட்டம்!

06:54 PM Oct 09, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்து அடக்கம் செய்தனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக, இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் அடுத்த நாள் காலை மற்றொரு பெண் அதே போல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பலாத்காரங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது, இதற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளதா, இதனை எப்படி தடுப்பது போன்ற பல்வேறு கேள்விகளை சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

உத்தரப்பிரதேசத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதையும் தாண்டி அந்தப் பெண்ணின் சடலத்தை அவர்களின் பெற்றோரிடமே காட்டாமல் எரித்துள்ளனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இளம் பெண்ணை மனிதவதை செய்து கொன்றுள்ளார்கள். அந்தப் பெண்ணை நாக்கை அறுத்து, கழுத்தை காயப்படுத்தி, முதுகுத் தண்டை உடைத்து கொடுமையான முறையில் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே, 22 வயது இளம்பெண் ஒருவர் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அப்படி என்றால் அங்கு என்ன நடைபெற்று வருகின்றது, பெண்களுக்கு அந்த மாநிலத்தில் ஏதாவது பாதுகாப்பு இருக்கின்றதா? அங்கு பெண்கள் வாழ முடியாதா, இது சுதந்திர நாடா அல்லது கொடுங்கோல் நாடா என்பது தெரியவில்லை.

மேட்டிக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனையும், என்கவுண்டரும் அளிக்கப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், இவர்களுக்கு மட்டும் ஏன் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். பின்னால் உயர் ஜாதி என்ற ஒன்று இருப்பதனால் தானே? அப்படி ஒன்று இருந்தால் இவர்கள் இந்த நாட்டில் எந்த விதமான தவறு செய்யலாமா? அவர்களுக்குத் தண்டனை என்ற ஒன்று இல்லையா? கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் கொல்லப்பட்டால் ஏன் யாருமே கண்டு கொள்ளமாட்டேன் என்கிறார்கள், அவர்கள் மனிதர்கள் இல்லையா, அவர்களுக்கும் உயிர் இருக்கிறதே? அவர்களையும் சக மனிதர்களாக பார்க்க வேண்டும்.

அந்த மாநிலத்தில் பா.ஜ.கவே சட்டமன்ற உறுப்பினர் மீது இதே மாதிரியான வழக்கு இருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை லாரி ஏற்றி கொல்கிறார்கள். இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. இதற்கு இதுவரை அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதா? இந்தியாவில், தினமும் பல்வேறு பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வெறும் 5 சதவீதம் மட்டுமே வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. மற்றவை அனைத்தும் யாரும் கண்டும் காணாமல் விடப்படுகிறது, மறைக்கப்படுகிறது, அல்லது பேசி தீர்க்கப்படுகிறது. இது ஒரு நல்ல ஜனநாய நாட்டில் நடக்கக் கூடிய சம்பவமா? இதனை முறைப்படுத்த இந்த அரசு இதுவரை என்ன செய்துள்ளது. இவ்வாறு கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT