style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதுச்சேரி ரெட்டியார் பாளையம் சரவணாநகரில் வசிப்பவர் உதயசங்கர். தனியார் ஏஜென்சியில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் முன் விரோதம் காரணமாக நேற்று இரவு 3 பேர் கொண்ட கும்பல், உதய்சங்கரை சரமாரியாக இரும்பு கம்பியால் அடித்து கொடூரமான முறையில் படுகொலை செய்து உள்ளனர்.
இதனை அடுத்து உடனடியாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் இடத்தில் காவல் துறை கண்காணிப்பாளர் ரஞ்சனா சிங் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.