ADVERTISEMENT

"உயிரைக் கொல்ல வேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும் என்ற வக்கிரம் காவல்துறையில் சிலருக்கு.." - மருத்துவர் ஷாலினி ஆவேசம்!

03:14 PM Jul 09, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு மனநல மருத்துவர் ஷாலினி பதிலளிக்கின்றார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கடையை மூடுவதில் பிரச்சனை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்ப உயிருடன் வரமாட்டார்கள் என்று அந்தக் குடும்பத்தில் யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு கொடுமைக்குப் பிறகும், இந்தக் காவல்துறையும் அரசும் என்ன செய்கின்றது என்ற கோபம் பொதுமக்களுக்கு நிச்சயம் ஏற்படும். அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிகக் கோபம் வெளிப்பட வாய்ப்பு இருக்கின்றது. இது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் மனநிலையாக இருக்கும். அந்தக் கோபத் தணல் எரிந்துகொண்டே இருக்கும். இந்தச் சம்பவத்தைச் செய்த போலிசார் கட்டாயமாக மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு உரிய தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். காவல்துறையில் இந்த மாதிரியான ஆட்கள் இருப்பது அந்தத் துறைக்கே ஒரு அவமரியாதையைப் பெற்றுத் தந்துவிடும்.

மற்ற உயிரைக் கொல்ல வேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும் என்ற வக்கிரம் காவல்துறையில் சிலருக்கு இருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களே இந்த மாதிரி சம்பவங்களில் ஈடுபட்டால் மக்களிடம் காவல்துறையினர் மீது நல்ல எண்ணம் எப்படி வரும். அவர்களை எப்படி நண்பர்களாக பார்க்க முடியும். அவர்கள் போலிஸ்காரர்கள் என்பதால் அவர்களைக் கண்மூடித்தனமாக நம்ப முடியாது. அவர்கள் நமக்கு பாதுகாப்பு தருவார்களா என்பதை உறுதி செய்யவேண்டியது மிக அவசியம். போஸிஸ் துறைக்கே இது ஒரு அதிர்ச்சிகரமான ஒரு விஷயமாகத்தான் இது இருக்கும். அவர்களே கூட இதனை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். எனவே அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

எங்களுக்குச் சேவை செய்வதுதான் காவல்துறையின் முழு நேர வேலையே. அதை விட்டுவிட்டு எங்களை அடித்துக் கொல்வதற்கு நீங்கள் பணிக்கு வரவில்லை. அரசு மக்களுக்குத்தான் விஸ்வாசமாக இருக்க வேண்டும். காவலர்கள் செய்யும் அநீதிக்குத் துணை போகக் கூடாது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கருணை காட்டக்கூடாது. அவ்வாறு கருணை காட்டினால், மக்களை அரசே கைவிட்டது போல் ஆகிவிடும். போலிஸுக்கு அவர்கள் உறுதுணையாக தொடர்ந்து இருப்பார்கள் என்றால் அது மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகிவிடாதா? எனவே மக்கள் பக்கமும் நாங்கள் இருப்போம் என்பதை அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும். இந்த மாதிரியான மனித உரிமை மீறல் செயல்களைச் செய்பவர்கள் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள், என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT