ADVERTISEMENT

'மக்கள் பண்பு கொண்ட தலைவர்தான் தேவை... 56 இன்ச் மார்பு இல்லை" - மருத்துவர் ஷாலினி!

11:21 AM Feb 06, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதும், மக்களைச் சந்திப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், தற்போது அரசியல்வாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பொதுமக்களால் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ராகுல்காந்தி, தமிழகத்தில் சில மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். மேலும் யூடியூப் சேனல் வைத்திருக்கும் நபர்களுடன் பிரியாணி சமைத்து உண்டார். இந்த பிரச்சாரம் பலரால் பாராட்டப்பட்டாலும், சிலர் விமர்சனமும் செய்கிறார்கள். அரசியல்வாதிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதா, அவர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT

எப்போதுமே தேர்தல் வரும் நேரத்தில் இந்த மாதிரியான சிந்தனைகள் எல்லோருக்கும் வருவதுண்டு. பாஜக மோசமான கட்சி என்றால் அதற்காக காங்கிரஸை ஆதரிக்க முடியுமா? காங்கிரஸ் நல்ல கட்சியா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. மேலும் பாஜக இந்துத்துவா என்றால் காங்கிரஸ் மென்மையான இந்துத்துவா என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

அப்படி என்றால் அதையும் எதிர்க்க வேண்டும்தான். நாம் ஒன்றும் காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடையப் போவதில்லை. முடிந்தால் காங்கிரஸ் கட்சியை நம்முடைய கோட்பாடுகளுக்கு கொண்டு வர முயற்சிப்போம். எரியிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்க்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். எந்தக் கொள்ளி நமக்கு பாதுகாப்பாக இருக்கிறது, நம் வாழ்க்கை தரத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது என்பதைப் பார்த்து நாம் அந்த கொள்ளியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான். சர்வாதிகார தன்மையில் இருக்கிறவர்களை நம்பி நாம் பயணிக்க முடியாது. அடுத்த முறை மாறிவிடுவார்கள் என்று நாம் யாரையும் நம்ப முடியாது. தொடர்ச்சியாக அவர்களின் செயல்பாடு மதத்தை நோக்கியதாக இருக்கும்போது அவர்களை மக்கள் எப்படி பார்ப்பார்கள்.

இருக்கிற கொள்ளியில் பெட்டர் கொள்ளியை நாம் தேர்தெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது நமக்கு ஏற்படுகிறது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். எனவே மக்கள்தான் நம்மை யார் வழிநடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். எங்களுக்கு வேண்டியது பெண்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய ஒரு நபர். அந்த வகையில் ராகுல் காந்தி டிக் வாங்குகிறார். ஒரு சின்ன பெண் அவருடன் புகைப்படம் எடுக்க அவரின் வண்டியில் ஏறும்போது அந்தக் குழந்கையின் உயரத்துக்கு குனிந்து, அந்த பெண்ணின் ஆடையை சரி செய்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இந்த மாதிரியான மக்கள் பண்பு கொண்ட ஒருவர்தான் வேண்டும். 56 இன்ச் மார்பு எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.

அந்த ராகுல் காந்தியையே ஒரு குழந்தை என்ற குற்றச்சாட்டைத்தானே பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது?

பாஜக மட்டுமல்ல, வெளிநாட்டில் கூட இந்த மாதிரியான நடவடிக்கைகள் தொடர்கிறது. அதாவது ஒருவரை இவர் இப்படிதான், இவருக்கு ஒன்றும் தெரியாது, அவருடைய அறிவு இவ்வளவுதான் என்று அவரது மதிப்பை குலைக்கும் நோக்கில் எதிராளிகள் செயல்படுபவாா்கள். அதுவே பெண்ணாக இருந்தால் அவரின் கற்பு நெறியைப் பற்றி தவறாகப் பேசுவார்கள். இது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சிலர் இந்த மாதிரியானடிவேலைகளை செய்து வருகிறார்கள். எனவே மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். மறுபடியும் தவறானவர்களைத் தேர்வு செய்யக் கூடாது. ராகுலுக்கு என்ன டெஸ்ட் வைத்து அவரை தோற்றுப் போய்விட்டார் என்று கூறுகிறார்கள்? அதில் எதுவும் உண்மையல்ல. சொல்லப்போனால் அவர் முன்னேறிக் கொண்டுதான் வருகிறார். தான் தோல்வி அடையவே இல்லை என்று சொல்லும் நபர்தான் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொய் சொல்கிறார். நாம் சொல்வதைக் கேட்கும் மனிதர்களை சற்று உயர்த்தி விடுவதுதான் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவியாக இருக்கும்.

ராகுல் காந்தி மட்டும் காங்கிரஸ் இல்லை. கட்சியில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்படி இருக்கையில் நாம் அவரை எப்படி நம்ம முடியும்?

ராகுல் காந்தி மட்டும் காங்கிரஸ் இல்லை, உண்மைதான். ஆனால் ராகுல் காந்தி நம்மை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாம்தான் அவரை பயன்படுத்திக் கொள்கிறோம். அவருக்கு இடமே இல்லை என்றாலும் நாம்தான் ஒரு இடத்தை ஏற்படுத்திக் தர விரும்புகிறோம். இந்தப் பையனுக்கு மனித பண்பு நம்மை ஆள்பவர்களை விட அதிகம் இருக்கிறது என்று மனதில் தோன்றுகிறது. இரக்க சுபாவம் இருக்கிறது, இவருக்கு நாம் ஒரு பொறுப்பை கொடுத்தால் அவர் நம்மைப் பாதுகாப்பார் என்ற எண்ணம் தோன்றுகிறது. எனவே நம்முடைய பாதுகாப்பை சார்ந்தே அவரின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT