Skip to main content

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத பூஜை செய்வதும் திட்டுவதும் ஒரே நோயின் இருவேறு அறிகுறிகள் - மருத்துவர் ஷாலினி பேச்சு!


உலக நாடுகளை கரோனா ஆட்டிப்படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் கூட அதன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றும் சில துறையினருக்குப் போதுமான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 
 

 

 

n


இந்தக் கரோனா காலத்தில் மூன்று துறைகளில் பணியாற்றுபவரின் பணிகள் மெச்சத்தகுந்த வகையில் இருக்கிறது. மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள். இவர்கள் இந்தக் கடினமான காலத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். கோவையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாத அபிஷேகம் செய்து ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார்கள். இது ஒருபுறம் இருக்க சில தினங்களுக்கு முன் வெளியான வீடியோ ஒன்றில் ஒரு பெரியவர் தூய்மைப் பணியாளர்களை அவமரியாதை செய்யும் விதத்தில் பேசியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இரண்டுமே ஒரு நோயின் இருவேறு அறிகுறிகள். வேலைக்குத் தேவைப்படுவதால் காலில் விழுந்து இப்ப எதுவும் பிரச்சனை பண்ணாதீங்க என்று போங்கு காட்டுவதும், என்னால் தான் நீ பிழைக்கிறாய் என்ற பேசுவதும் ஒரே மனநிலையில் இருக்கின்ற இருவர் பேசுவதைப் போலத்தான். இதில் ஒன்றும் அவர் நல்லவர், இவர் கெட்டவர் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை இவர்கள் இருவரும் சமமானவர்களாகப் பார்க்கவில்லை. கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்த வேண்டும், இல்லை என்றால் காலில் விழ வேண்டும் என்ற மனநிலையின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டும். சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகாலம் கழித்தும் நாம் அவர்களைச் சமமாக நடத்தவில்லை என்றால் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். அவர்களை நாம் சமமாகவே பார்க்கவில்லையே? 

 

http://onelink.to/nknapp


பிரதமர் மோடியே அவர்களின் கால்களைக் கழுவி அவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்று கூறினாரே?

மோடி புகைப்படத்துக்காகப் பல்வேறு விஷயங்கள் செய்யுவார். அவர் என்ன தினங்தோறும் ராட்டையா சுற்றுகிறார். சிலர் நான் எவ்வளவு நல்லவன் பார்த்தியா என்ற என்ற மனநிலையில் இதைச் செய்கிறார்கள். அன்றாடம் அதே மனநிலையில் அவர்களை மதிக்கிறார்களா என்றால் அது இல்லை. அவர்களை மற்ற மனிதர்களைப் போல் கூட மதிப்பதில்லை. புகைப்படத்திற்காக போஸ் கொடுப்பதில் என்ன நன்மை வந்துவிடப்போகிறது. உள்ளார்ந்து அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகத்தான் இன்றுவரை நினைத்து வந்திருக்கிறோம். அந்த தாத்தா அவர்களைத் திட்டினாரே அது என்ன சொல்ல வருகிறது என்றால், நீ என் மூலம் பிழைப்பவன், நான் உன்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம் என்பதன் மனநிலையின் வெளிப்பாடு. அதை அப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களை மரியாதைக் குறைவாக நடத்தும் இந்த அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். அவர்கள் இல்லை என்றால் சமூகமே ஸ்தம்பித்து போய்விடும். நம்முடைய வீட்டில் செப்டி டேங்க் அடைத்து கொண்டால் எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் நாம் என்ன செய்ய முடியும். அவர்கள் வந்தால்தான் அதனை க்ளியர் செய்ய முடியும். அப்படி என்றால் அவர்களை நாம் எப்படி மதிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்கிறோமா என்று பார்க்க வேண்டும். வெளிநாடுகளில் எல்லாம் இப்படி இல்லையே. பாராக் ஒபாமா சாலையில் வரும்போது ஒரு தூய்மைப் பணியாளர் தூய்மை செய்துவிட்டு தெரு ஓரத்தில நிற்கும் போது, அவரைத் தட்டி கொடுத்துவிட்டு செல்கிறாரே, அவருக்கு நான் அமெரிக்க அதிபர் என்ற மனநிலை தோன்றவில்லையே. இந்தியா ஒரு ஆன்மிக நாடு என்று சொல்கிறார்கள், ஆனால் இதில் மட்டும் பாகுபாட்டைக் காட்டுவார்கள். அதுதான் எப்படி என்று தெரியவில்லை. இந்த எண்ணம் மாற்றறப்பட வேண்டிய ஒன்று.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்