ADVERTISEMENT

பாதுகாப்பு தேடி காவல்நிலையம் சென்றால் அங்கே அவர்களுக்கே பாதுகாப்பில்லை - மருத்துவர் ஷாலினி வேதனை!

11:36 AM Mar 12, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் மருத்துவர் ஷாலினி அவர்கள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தார். இதுதொடர்பாரக அவர் பேசியதாவது, "பலரும் இங்கே செந்தமிழில் பேசினார்கள், என்னால் அப்படி எல்லாம் பேச முடியாது. எனக்குத் தெரிந்த சென்னை தமிழில்தான் பேசுவேன். ‘நடுவுல கொஞ்சம் அறிவியலைக் காணோம்’ என்றதும் இவர்கள் எதைப் பற்றி பேசப் போகிறார்கள் என்று நீங்கள் சற்று குழம்பி கூட போக வாய்ப்பிருக்கிறது. என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது அன்றாடம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூறி என்னை அழைத்தார்கள். அப்போது நீங்கள் ‘நடுவுல கொஞ்சம் அறிவியலைக் காணோம்’ என்ற தலைப்பையே வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அதற்கும் பெண்களுடைய தற்போதைய நிலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை நாம் பேச வேண்டும். அதற்கு முன் பெண்களுடைய தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றியும் நாம் பேச வேண்டும். இங்கே பேசியவர்கள் பலரும் கூறினார்கள் பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று. நான் தற்போது ஒன்று கூற விரும்புகிறேன். உலகில் கர்ப்பமாக இருக்கும் எந்தப் பெண்ணும் 5 மாதம் ஆனவுடன் மருத்துவரிடம் சென்று தனக்கு எந்த குழந்தை பிறக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவில் அப்படி மருத்துவர் பதில் கூறினார் அவர் சிறைக்குச் செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

ஏனென்றால் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் காட்டப்படும் பாகுபாடு. பெண் குழந்தைகளை சமூகம் சுமை என்று நினைக்கிறது. பெண் குழந்தைகள் செலவு வைப்பார்கள் என்ற எண்ணம் எல்லாம் சமூகத்தில் புரையோடி இருக்கிறது. அவர்கள் படித்தாலும் சம்பாதித்து யாரோ ஒருவருக்கு கொடுக்க போகிறது. அதற்கு நாம் எதற்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் மக்கள் மனதில் இருக்கிறது. இந்த முதலீடு திரும்ப கிடைக்கப் பெறாது என்று நினைக்கிறார்கள். சரி, பெண்கள் படித்து வேலை செய்யும் இடங்களில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தால் அங்கும் நம்மால் இருக்க முடியவதில்லை. மீ டூ தொல்லைகள் தொடர்கிறது. அதைப் பற்றி வெளியே சொன்னால், ‘தற்போது ஏன் கூறுகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள், எப்போது ஒரு பிரச்சனையைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தெரியாமல் பெண்கள் குழம்பிப் போய் உள்ளார்கள். அதற்குக் கூட அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. உடனே சொன்னாலும் பிரச்சனை, லேட்டா சொன்னாலும் பிரச்சனை. போலீஸ்காரர்களிடம் சொல்லலாம் என்று பார்த்தால் போலீஸ்கார அம்மாவுக்கே பிரச்சனை. இப்போது இதை எங்கே போய் சொல்வது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். ஏன் நாம் இந்த மாதிரியான இக்கட்டான நிலையில் இருக்கிறோம், நமக்கு என்ன பிரச்சனை என்று பார்க்க வேண்டும். நாம் அறிவியலை இடையில் மறந்துவிட்டோம் என்பது மட்டுமே காரணமாக இருக்கும். அது எப்போதிலிருந்து காணாமல் போய்விட்டது என்று பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லா மனித குலங்களும் அறிவியல் ரீதியாகத்தான் யோசிக்கிறார்கள். பிறகு அதில் மாற்றங்கள் வந்துவிடுகிறது. ஆனால், அது பெண்களுக்கு எதிராக இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT