ADVERTISEMENT

உலகின் மிகப்பெரிய பறவை எது?

06:13 PM Sep 27, 2018 | Anonymous (not verified)


உலகில் வாழ்ந்த மிகப்பெரிய பறவையினம் யானைப் பறவைதான் என்றும், அதன் எடை 860 கிலோ எடை இருந்திருக்கும் என்று முடிவுக்கு வந்திருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இதுவரை உலகின் மிகப்பெரிய பறவை எதுவாக இருந்திருக்கும் என்ற புதிருக்கு விடை கிடைத்திருப்பதாக ஜுவாலஜிகல் சொசைட்டி ஆப் லண்டன் இதழின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹேன்ஸ்ஃபோர்டு கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT


இந்தப் பறவைகள் 10 அடி உயரம் வளர்ந்திருந்தன. இவற்றின் எலும்புகளை நவீன எந்திர அளவையில் கணித்து, எடையை முடிவு செய்தோம். இவை நிச்சயமாக பறந்திருக்க முடியாது. அதேசமயம் இறக்கைகளுடன் இவை பூமியில் உலவியிருக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT