கேன்சரால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனை காப்பாற்ற மருத்துவமனை வாசலில்பொதுமக்கள் 5000 பேர் திரண்ட சம்பவம் உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

uk

லண்டனை சேர்ந்த ஆஸ்கார் என்ற 5 வயது சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். 3 மாத காலத்திற்குள் அந்த சிறுவனுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை தரவேண்டும் என்ற கட்டாயத்தில் அது குறித்து விளம்பரம் ஒன்று செய்யப்பட்டது.

Advertisment

அந்த சிறுவன் படிக்கும் பள்ளியும், தன்னார்வ தொண்டு அமைப்பும் இணைந்து சிறுவனின் நிலையை விளக்கி, சிகிச்சை பற்றிய தகவல்களோடு விளம்பரப்படுத்தி உதவி கேட்டது. இது நாடு முழுவதும் பரவ, அந்த சிறுவனுக்கு உதவி செய்ய மக்களிடமிருந்து11,000 டாலர்கள் பணம் நன்கொடையாக வந்துள்ளது.

அதுமட்டுமின்றி அந்த சிறுவனுக்கு ஸ்டெம் செல் அளித்து சிகிச்சைக்கு உதவ 5800 பேர் ஆன்லைன் வழியாக பதிவு செய்துள்ளனர். அதன் பின் மருத்துவ சோதனைகளுக்கு அவர்கள் அழைக்கப்பட்ட போது யாருமே எதிர்பார்க்காத வகையில் 5000 பேர் மருத்துவமனை வாசலில் குவிந்துள்ளனர்.

Advertisment

மக்கள் மருத்துவமனை வாசலில் மருத்துவ சித்தனைகளுக்காக காத்துக்கொண்டிருந்த போது திடீரென அந்த பகுதியில் கனமழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் அங்கிருந்த மக்கள் சற்றும் நகராமல் வரிசையிலேயே காத்திருந்தனர். அதன்பின் அங்கு கூடியிருந்த அனைவரின் செல் மாதிரிகளும் மருத்துவர்களால் சேகரிக்கப்பட்டன.

மக்களின் இந்த உதவிக்கும், பிரார்தனைகளுக்கும் நன்றி தெரிவித்து அந்த சிறுவனின் குடும்பத்தினரும், பள்ளி நிர்வாகமும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் ஸ்டெம் செல் சிகிச்சைக்காக உதவ வந்த அனைவருக்கும் சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், அதன் முடிவுகளை வைத்து அந்த சிறுவனுக்கு யாருடைய ஸ்டெம் செல் ஒத்துப்போகும் என கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறுவனுக்காக 5000 பேர் கொட்டும் மழையில் வரிசையில் நின்றிருந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.