ADVERTISEMENT

மாநில அரசுக்கும் யூனியன் பிரதேசத்துக்கு இவ்வளவு அதிகார வித்தியாசம் இருக்கிறதா..!

06:05 PM Aug 08, 2019 | suthakar@nakkh…

இந்தியா சுதந்திரம் அடைந்த போது காஷ்மீர் தனியாக இருந்தது. இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தான் உடனோ இணையாமல் சுயாட்சி நாடாக இருந்தது. பாகிஸ்தான் அச்சுறுத்தல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மன்னர் ஹரி சிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புக் கொண்டார். இதன் பின்னர் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இதனால் மாநில அந்தஸ்தை இழந்து யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாற்றியுள்ளது.இதற்கு சட்டமன்றம் இருக்கும். மேலும் காஷ்மீரில் இருந்து லடாக் பிரிக்கப்பட்டு மற்றொரு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமன்றம் கிடையாது. இந்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். இதையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இருந்தும் மத்திய அரசுக்கு போதுமான அளவு மெஜாரிட்டி இருந்ததால் இரண்டு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாநில அரசுக்கும், யூனியன் பிரதேசத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை இங்கே காணலாம்.

மாநில அரசு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநிலம் என்பது ஒரு பிரிவு. தனி அரசாக செயல்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகத்தை மேற்கொள்ளும். சட்டத்தை இந்த அரசே அமைத்துக் கொள்ளலாம். இதற்கென தனிப்பட்ட சட்டமன்றம், முதல்வர், நிர்வாகம் என்று இருக்கும். ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுவார். மாநிலங்களுக்கு இடையே நிலப்பரப்பு, புவியியல் அமைப்பு, வரலாறு, ஆடை அணிவது, பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்கள், அனைத்தும் வேறுபட்டு இருக்கும்.

யூனியன் பிரதேசம்

மத்திய அரசின் நேரடி பார்வையின் கீழ் யூனியன் பிரதேசங்கள் வருகிறது. லெப்டினென்ட் கவர்னர்கள் மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பர். மத்திய அரசு பரிந்துரைக்கும் ஒருவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயல்படுவார். தற்போது டெல்லி, புதுச்சேரி தவிர வேறு எந்த யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இல்லை. சிறிய பகுதியைக் கொண்ட யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். மத்திய அரசு நேரடியாக தனது அதிகாரத்தை நேரடியாக யூனியன் பிரதேசத்தில் செலுத்த முடியும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT