ADVERTISEMENT

எம் பொண்ண பத்தி ஏன்டா அப்படி போட்டேன்னு கேட்டதுக்கு... தாயின் கண்ணீர்!

10:59 AM Jun 21, 2019 | Anonymous (not verified)

கடலூர் மாவட்டம் குறவன் குப்பத்தை சேர்ந்த நீலகண்டன் - தெய்வானை தம்பதியரின் மகள் ராதிகா(23). அவரது மாமன் மகன் விக்னேஷ். இருவர் வீட்டிலுமே இவர்களது காதலுக்கு எதிர்ப்பில்லாத நிலையில், இருவரும் திடீரென அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது இந்த வட்டாரத்தையே அதிர வைத்திருக்கிறது. ஒரு காதல் தான், இந்தக் காதல் ஜோடியின் தற்கொலைக்குக் காரணமென்றால் நம்பமுடிகிறதா? ராதிகாவின் வீட் டருகே வசித்து வந்தவர் பிரேம் குமார். பிரேம்குமார் (23) வடலூர் இந்திரா நகரில் உள்ள வினோதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மைனர் பெண் ணைக் காதலித்து வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வினோதாவுடன் தலை மறைவாகிவிட்டார் பிரேம். பெண்ணைக் காணாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது பெண்ணின் ஊரைச் சேர்ந்த ராதிகாவின் மாமன் மகன் விக்னேஷ், அந்தப் பெற்றோரின் தவிப்பைப் பார்த்துவிட்டு தனது அத்தை வீட்டினருகில்தான் பிரேம் குமாரின் வீடு உள்ளது என அடை யாளம் காட்டியுள்ளார். விக்னேஷின் இந்தச் செயல்தான் ராதிகாவுக்கு எமனாக மாறியுள்ளது.

ADVERTISEMENT



விக்னேஷின் தந்தை சேகரிடம் பேசினோம், "பிரேம்குமார் மைனர் பொண்ணோட ஓடினதால, ரெண்டு பேரையும் கண்டுபிடிக்க சொல்லி போலீஸ்ல புகார் கொடுத்துட்டுத் பெத்தவங்க தேடினாங்க. அப்ப என் பையன் விக்னேஷ் அந்த பையனோட வீட்டைக் காட்டி னான். அதுல என் பையன்மேல அந்த பிரேம்குமாருக்கு கோபம் இருந்திருக்கு. வஞ்சம் வெச்சு பேஸ்புக்குல என் தங்கச்சி பொண்ண பத்தி தப்புத் தப்பா போட்டி ருக்கான். விவரம் தெரிஞ்சு மன சொடிஞ்சு போன என் தங்கச்சி பொண்ணு தூக்கு மாட்டிக்கிச்சு. யாரோ ஒரு குடும்பத்துக்கு உதவி செய் யப்போய், எங்க குடும்பத்துல இரண்டு இளம் குருத்து களைப் பறிகொடுத்துட் டோமய்யா'' என கதறுகிறார்.

ADVERTISEMENT



ராதிகாவின் தாயார் தெய்வானையோ, ""எம் பொண்ண பத்தி ஏன்டா அப்படி போட்டேன்னு கேட்டதுக்கு, "உன் அண்ணன் பையன் என் வீட்ட காட்டிக் கொடுத்தான்ல, அதான் அப்படி போட்டேன்'னு சொன்னதோட கும்பலுக்கே அந்தப் பதிவையெல்லாம் காட்டி, எம் புருசனையும் அடிச்சாங்க. என் பொண்ணு இனிமே உசுரோட வருவாளா?'' என அழுது புரள்கிறார்.



தன்னைப் பழிவாங்குவதற்காக தான் காதலித்த அத்தை மகளை அசிங்கப்படுத்திட்டாங்களே..… அத்தை மகள் அவமானப்படவும், சாகவும் தான் காரணமாகி விட்டோமே… என மனமுடைந்த நிலையில் வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற விக்னேஷ், அருகிலுள்ள வீணங்கேணி கிராமத்திலிருந்த மரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட ராதிகா, விக்னேஷ் இருவரும் ஒரு சமூகம், தற்கொலைக்கு காரணமான பிரேம்குமார் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் வழக்கம்போல மாவட்டத்தில் பதற்றம் பற்றிக்கொண்டது. அரசியல் அறிக்கைகளும் வெளியாயின. அன்று இரவே மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் குவிந்த உறவினர்களும், பா.ம.க.வினரும் தற்கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி முற்றுகையிட்டனர்.


பின்னர் விருத்தாசலம்-கடலூர் சாலையில் மறியல் செய்தனர். நள்ளிரவு 12 மணி வரை மறியல் தொடர்ந்ததால் அங்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் அதிவிரைவுப் படையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்நிலையில் மாவட்டக் கண்காணிப்பாளர் சரவணன் முன்னிலையில் பிரேம்குமார் சரணடைந்தார். அவரது தந்தை பன்னீர்செல்வத்தையும், சித்தப்பா மகன் வல்லரசுவையும் மந்தாரக்குப்பம் காவல்துறையினர் கைதுசெய்தனர். கடந்த மே மாதம் 8-ஆம் தேதி காதல் விவகாரத்தில் கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதியின் கொலை கலவரத்தை ஏற்படுத்தியது. சரியாக ஒருமாதம் கடந்த நிலையில் ஜூன் 10-ஆம் தேதி ராதிகாவும் விக்னேஷும், தற்கொலை செய்துகொண்டனர். இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டது ஒரு சமூகமாக வும் பாதிப்புக்கு காரணமானது ஒரு சமூகமாகவும் இருப்பதால், சமூக இணக்கத்தில் பாதிப்பு வருமோ என்ற அச்சம் அப் பகுதியில் எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT