ADVERTISEMENT

சேலத்தில் கரோனா பரப்பியதாக 16 பேர் கைது!

07:50 PM Apr 13, 2020 | rajavel

சேலத்தில் கரோனா வைரஸை பரப்பியதாக இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த இஸ்லாம் மத போதகர்கள் உள்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT


இந்தோனேசியா நாட்டில் இருந்து 11 பேர் கொண்ட இஸ்லாம் மத போதகர்கள் குழுவினர், கடந்த மார்ச் 11ம் தேதி சேலம் வந்தனர். அவர்கள் சேலம் கிச்சிப்பாளையம் ஜெய் நகர் மசூதியில் மதபோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல்வேறு மசூதிகளில் பரப்புரையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT


இந்தோனேசிய மத போதகர்கள் சேலத்தில் தங்கியிருக்கும் தகவலே காவல்துறைக்கு மிக தாமதமாகத்தான் தெரியவந்தது. இதையடுத்து, மாநகர காவல்துறையினர் இந்தோனேசிய குழுவினர் மற்றும் அவர்களுடன் வந்த சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் என 12 பேருக்கும், சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மத போதகர்கள் சென்று வந்த மசூதிகளைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மத போதகர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், சேலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்குக் காரணமாக இருந்ததாக இந்தோனேசிய மத போதகர்கள், அவர்களுடைய வழிகாட்டி சிலர் என, மொத்தம் 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


தற்போது சேலம் அரசு மருத்துவமனை, தனிமை வார்டில் உள்ள அவர்களை காவல்துறையினர் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவர்கள் 16 பேரையும் சிகிச்சை முடிந்த பிறகு, நீதிமன்ற காவலில் அடைக்க நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT