ADVERTISEMENT

"ஸ்ரீபெரும்புதூர் தெரியுமான்னு கேக்கிறீங்களே... அந்த தொகுதி எம்எல்ஏவே நான்தான்.." - சீமானுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ எச்சரிக்கை!

11:44 AM Oct 13, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சில நாட்கள் முன்பு கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் காங்கிரஸ் கட்சித் தலைவர்களைக் கிண்டல் செய்து பேசினார். இதற்கு அப்போதே அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது "நாம் தமிழர் கட்சித் தலைவர் தலைவர் சீமான் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் விதமாக பேசிவருகிறார். அவர் வாங்கும் கூலிக்கு சரியாக மாரடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி அவர் பேச வேண்டிய தேவை எதற்கு வருகிறது. இது மிகத் தவறான உதாரணம். உ.பி.யில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதைப்பற்றி கேட்க அவருக்குத் துப்பில்லை, மத்திய அமைச்சர மகன் அவர்கள் மீது கார் ஏற்றிக் கொல்கிறார், அதைப் பற்றி வாய்திறக்க வழியில்லை, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், காங்கிரசை திட்டுவதை ஒரு தொழிலாகவே அவர் வைத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற சம்பவம் ஒரு வரலாற்று துன்பம். அங்கே என்ன நடைபெற்றது என்று அவர் கேட்கிறார். அங்கே துரோகம் நடைபெற்றது. வந்தாரை வாழவைத்துக்கொண்டிருந்த தமிழகத்துக்கு 1991க்குப் பிறகு பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

சீமானிடம் நான் கேட்கிறேன், நீங்கள் இதுவரை யாரைக் கடிக்கவில்லை? யாரை விட்டுவைத்துள்ளீர்கள், இயக்குநர் ரஞ்சித் விளிம்புநிலை சமூகத்திலிருந்து வந்தார் என்றால், அது உனக்குப் பிடிக்காது, அவரை கடித்து குதறுவீர்கள். பேராசிரியர் அருணனை பற்றி தவறாகப் பேசுகிறார். உங்களுடைய கருவையே ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா? இந்திரா காந்தி குடும்பம் என்பது நாட்டில் உள்ள விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையை தன்னகத்தே கொண்ட ஒரு குடும்பம். எனவே அவரையும் அவரது குடும்பத்தையும் அவமானப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீங்கள் என்ன பேசுகிறீர்கள், வாயில் வந்ததை எல்லாம் பேசுகிறீர்கள். எங்களுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் கொள்கை அளவில் பெரிய வேறுபாடு இருக்கிறது. பாஜக நாட்டிலேயே இருக்கக் கூடாது என்று விரும்புகிறோம். ஆனால் ஒருபோதும் அவர்களைப் பற்றி நாங்கள் அவதூறு, வெறுப்பு பிரச்சராம் மேற்கொள்ளவில்லை. சீமான் தொடர்ந்து இதே மாதிரி பேசிவந்தால் அவர் வீட்டுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

நீங்களும் நியாயமாக பேசுங்கள், நாங்கள் பதில் சொல்கிறோம். சாட்டை துரைமுருகன் என்ற நபர், சீமானை மேடையில் வைத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் தெரியுமா என்று கேட்கிறார். அப்படி கேட்டால் நாங்கள் என்ன பயந்துவிடுவோமா? பல ஞானிகள், புனிதர்கள் பிறந்த மண்ணை ரத்தக்கறை படிய வைத்துள்ளீர்கள். அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டும். இதில் நீங்கள் பெருமைப்பட என்ன இருக்கிறது. நான்தான் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர், வந்துதான் பாருங்களேன், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இத்தோடு காங்கிரஸ் தலைவர்களைக் கொச்சையாக பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு மேலும் அவர் இவ்வாறு பேசினார் என்றால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT