Skip to main content

சீனா எங்கே? இந்தியா எங்கே? உலகையே கட்டியாளலாம்!- பகுதி: #4

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

அமெரிக்க அதிபரின் அந்த தைரியம்!

எத்தனை இறக்குமதிக்கு சுங்கவரியை நீக்குவீர்கள்? சைனாவினுடைய அத்தனை இறக்குமதிக்கும் சுங்கவரியைக் குறைத்திட வேண்டும். நாங்கள் இதிலெல்லம் குறைக்கிறோம். உங்களுடன் நாங்கள் வர்த்தகம் பண்ணிக்கொள்கிறோம். டெக்னாலஜிக்கு நாங்கள் திறந்துவிடுகிறோம். எங்களுடைய பொருள்களுக்கு சைனா நீங்களும்  கொஞ்சம் திறந்துவிட வேண்டும். இப்படித்தான் பேசியிருப்பார்கள். மற்றபடி, பொலிடிகல், ஜியொ-பொலிடிகல், எகனாமிக்ஸ் இந்த 3 லெவலிலும் இன்றைக்கு நாம் இல்லை. ஆனால்.. இந்தியா கண்டிப்பாக சைனாவின் நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையை நமது பிரதமர்..? ஹவ்டி மோடி  நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “என் நாட்டு மக்களுக்கு நான் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன். என்நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் நான் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறேன். என் நாட்டு மக்களுக்குத்தான் கல்வியிலும் ஹெல்த்லயும் முன்னுரிமை.  அதற்குப்பிறகுதான் வெளிநாட்டு குடிமகன்கள். அடுத்ததுதான் அகதிகள்..” என்று தைரியமாகச் சொன்னார்.“என் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறேன். அதனால்தான், நான் இன்றைக்கு  இந்தியாவுடன் கை கொடுக்கிறேன்.” என்றார்.  அப்படி நாம் சொல்ல முடியுமா?  சொல்லமுடியாது. 

CHENNAI INFORMAL SUMMIT 2019 INDIA AND CHINA PART 4


பகடைக்காய்களாக உருட்டப்படுகிறோம்!

வெளிநாட்டு முதலீடுகள்..  இந்தியாவிலிருந்து குறிப்பாக JSW அதிகமாக முதலீடு செய்கிறது. எங்கள் நாட்டு இளைஞர்களுக்கு குறிப்பாக அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறோம் என்று சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. இதையெல்லாம் சொல்லக்கூடிய அளவில், இந்திய பிரதமர் அடுத்த 10 ஆண்டுகளில் சைனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள டிரேட் பாலன்ஸை நாங்கள் ஜீரோவாக்கி காண்பிக்கிறோம். உங்களோடு கை குலுக்குகிறோம். உங்களோடு சேர்ந்து  இந்த ஏசியா.. ஏசியன்.. ஈரோப்பியன் பிராந்தியத்தில் இரண்டு நாடுகளுமே ஒரு வலிமையான நாடாக, நட்பு நாடுகளாக இரண்டு நாடுகளுமே மாறுவோம். இரண்டு நாடுகளையும் பகடைக்காயாக சில சில்லறை நாடுகள் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. அதை நாம் மாற்றுவோம். 

CHENNAI INFORMAL SUMMIT 2019 INDIA AND CHINA PART 4


 

உலகையே கட்டியாளலாம்!

ஒரு equal peddaling stage- ஐ சைனாவும் இந்தியாவும் அடுத்த 10 ஆண்டுகளில் அமைத்துக்கொடுப்போம் என்று சொன்னால்.. அடுத்த 10 ஆண்டுகளில் நிச்சயம் வராது. 30 ஆண்டுகளில் சைனாவும் இந்தியாவும் ஒரே லெவலில் வரும். அது உலகத்தையே கட்டி ஆளக்கூடிய ஒரு ஜாய்ன்ட் ஃபோர்ஸ் ஆக மாறக்கூடிய  அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது.  ஆனால். அது நடக்குமா என்று தெரியவில்லை. அது எல்லாமே நமது பிரதமரின் கைகளில்தான் இருக்கிறது. அவர் எந்த அளவுக்கு  இந்தியாவை அதிகமாக பொசிஷன் பண்ணுகிறாரோ? அங்கே போய் நான் டாய்லெட் கட்டி கொடுத்தேன்னு சொன்னா பிரயோஜனம் கிடையாது. அதனால், இந்தியாவினுடைய strength-ஐ  maximize பண்ணி, இந்தியாவை  நான் இப்படி உருவாக்குவேன் என்று சொல்லி, அதைச்  சைனாவுடன் சேர்ந்து எப்படி செய்வோம் என்று strategic ஆக பிளான் பண்ணினால்  கண்டிப்பாக அது நடக்கும். 

CHENNAI INFORMAL SUMMIT 2019 INDIA AND CHINA PART 4




இருவருடைய பேச்சுவார்த்தையும் அடுத்த 30 ஆண்டுகளுக்குள்  ஆற்றல், நீர், சுற்றுச்சூழல், தொழில் விவசாயம் என பல்வேறு நிலைகளில் இந்தியாவும், சைனாவும் இணைந்து, தொழிநுட்பத்திலும், அறிவியலிலும், வர்த்தகத்திலும் கூட்டு ஒப்பந்தம் மூலமாக, உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவில் வளர்ந்து நிற்கச் செய்யும். அப்படிப்பட்ட சூழ்நிலையை நமது பிரதமரும் சைனா அதிபரும் உருவாக்குவார்கள் என்று நம்புவோம்.” என்றார் எதிர்பார்ப்புடன். 
 

‘கனவு காணுங்கள்’என்று அப்துல்கலாம் சொன்ன மந்திர வார்த்தையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறார் வெ.பொன்ராஜ். 


முந்தைய பகுதி: 

சீனா எங்கே? இந்தியா எங்கே? தீபாவளி கொண்டாட்டத்துக்கு வேட்டு!- பகுதி: #3
 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.