Skip to main content

சீனா எங்கே? இந்தியா எங்கே? தீபாவளி கொண்டாட்டத்துக்கு வேட்டு!- பகுதி: #3

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

தீபாவளி கொண்டாட்டத்துக்கு வேட்டு!

அடுத்தது ஃபயர் ஒர்க்ஸ். சைனாவில் அதிகமாக பட்டாசு உற்பத்தி நடக்கிறது. அதை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்குத் தடை  இருக்கிறது. தடையை நீக்கி விடுங்கள் என்று சீனா தரப்பில் கேட்க வாய்ப்பு இருக்கிறது.  அந்தத் தடையை நீக்கி விட்டு சீனா பசுமை பட்டாசு என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்புகள் அதிகம். உலக அளவில் 80 சதவீதம் பட்டாசு உற்பத்தி செய்வது சைனாதான். சிவகாசியில் தயாரிப்பது க்ரீன் ஃபயர் ஒர்க்ஸ் கிடையாது. இது காற்றை மாசுபடுத்துதுன்னு அமைச்சரெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. இதெல்லாம் தவறான தகவல். காற்று மாசுபாடுக்கு காரணம் வாகனங்களும் தொழிற்சாலைகளும்தான். உலகத்திலுள்ள அத்தனை நாடுகளிலும் சைனா பட்டாசுகளை வருடத்துக்கு 10 தடவை வெடிக்கிறாங்க. அது விண்வெளியை நிரப்புகிறது. அங்கெல்லாம் எதுவும் ஆகவில்லை. இந்தியாவில் ஒரே ஒரு தீபாவளி நாளில்தான் பட்டாசு வெடிக்கிறோம். அந்தக் கொண்டாட்டத்தையும் ஒழிப்பதற்கான வேலை நடக்கிறது. இனி,  சைனா பட்டாசுகள் கிரீன் பட்டாசு என்ற பேரில்  உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.  

 

INDIA AND CHINA LEADERS MEET MAMALLAPURAM IN KANCHEEPURAM DISTRICT



பிரதமரின் வாதம் வலிமையானதா?

எலக்ட்ரானிக் பொருட்களைத்தான்  நாம் அதிகமாக இறக்குமதி செய்கிறோம். 0% ட்யூட்டிங்கிறதால அதிகமாக இறக்குமதி பண்ண முடியும். அதற்கான வாய்ப்புக்களும்  அதிகமாக இருக்கின்றன.  இன்றைக்கு  trade deficit  63-லிருந்து 70 பில்லியன் டாலர் வரை  வந்துவிட்டது.  அடுத்து 100 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடக்கும் போது trade deficit அதிகமாக அதிகமாக, 10 பில்லியன் டாலர்தான் நாம்  ஏற்றுமதி பண்ணுவோம் என்ற நிலைமையை மாற்றி நமது பிரதமர் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் சைனாவுக்குமான வர்த்தகத்தை 200 பில்லியனாக்குவோம். 100 பில்லியன் நாங்க ஏற்றுமதி பண்ணுவோம். 100 பில்லியன் உங்ககிட்ட இருந்து இறக்குமதி பண்ணுவோம் என்று சொல்லக்கூடிய ஒரு வலிமையான வாதத்தை பிரதமர் மோடி வைத்திருந்தார் என்றால், அடுத்த 10 ஆண்டுகளில் சைனாவைப் போல நாங்களும் வளர்ந்து காண்பிப்போம் என்ற நிலையில், இந்தியாவும் சைனாவும் ஒரே மட்டத்திலிருந்து கை கொடுக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும். இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவுகள்தான் அதை நமக்குத் தெரிவிக்கும். 

 

இரு நாடுகளும் சரிசமமா?

நாம் எதை வைத்து அவர்களிடம் சமமாகப் பேச முடியும்? மாமல்லபுரம் குறித்துப் பேசலாம். சைனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பழங்கால தொடர்பு பற்றி பேசலாம். கலாச்சார ரீதியாக ஒன்றாக இருக்கிறோம் என்று பேசலாம். போட்டோ எடுத்துக்கொள்ளலாம். டான்ஸ் பார்க்கலாம். கலாச்சார நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாம். போதி தர்மர் நாங்கள்தான் என்று சொல்லிக்கொள்ளலாம். இதுபோன்ற பழங்கதைகளைப் பேசலாம். இதுபோன்ற பேச்சுவார்த்தை, ஒரு புரிதலை ஏற்படுத்தி, இரு நாடுகளுக்குமிடையே மறைமுகமாக போர் ஏற்படக்கூடிய சூழலைத் தவிர்த்து, இரண்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளை உட்காரவைத்துப் பேசக்கூடிய சுமுகமான நிலையை ஏற்படுத்தி, அடுத்த லெவல் டிஸ்கசனுக்கு இது ஒரு அடிப்படையாக அமையும். அவ்வளவுதான். மற்றபடி சைனாவுக்கு சரிசமமாக நின்று கைகொடுக்க முடியாது. எப்போது energy-யில் independence-ல் நாம achieve பண்ணப்போகிறோம்? Energy Security குறித்து இந்தியா பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், 2030-ல் Energy Independence achive பண்ணுவோம் என்று கலாம் கூறினார். அதை அடைந்துவிட்டால் சைனாவுக்குச் சமமாக நாம் வரமுடியும். Ever Green Revolution என்று அப்துல் கலாம் சொன்னார். அதை இந்திய அரசு கடைப்பிடித்தால் சைனாவுக்கு இணையாக நாம் வர முடியும்.

 

INDIA AND CHINA LEADERS MEET MAMALLAPURAM IN KANCHEEPURAM DISTRICT


இதை எப்படி சொல்ல முடியும்?

2000 கிலோமீட்டர் நதிகளை சைனா இணைத்துவிட்டது. நாங்களும்  இந்தியாவில்  நதிகளை இணைப்போம். அதிகளவில் நீர்வழிச்சாலைகளை உருவாக்குவோம். முப்போகம் விளைவிப்போம் என்று சொன்னால், சைனாவும் இந்தியாவும் சமமாகக் கை குலுக்கலாம்.  நாங்கள்  90% informal sector –ஐ ஒழித்துவிட்டோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக 10% formal sector-ஐயும் ஜி.எஸ்.டி மூலமாக ஒழித்துவிட்டோம். இதை சைனாவிடம் சொல்ல முடியுமா? இத்தனை லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? 30 ஆண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்த சைனாவையும் நாங்கள் manufacturing hub ஆக மாற்றுவோம் என்று சொல்லி,  30 ஆண்டுகளில் அப்படி  உருவாக்கி,  இன்றைக்கு அத்தனை நாடுகளுக்கும் சவால் விட்டு கொண்டிருக்கின்ற சைனாவிடம் போய் நாங்கள்  எல்லாவற்றையும்  ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியுமா? 

 

போனது போகட்டும். அடுத்த 10 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு  நாங்கள்  மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்குவோம்.  எங்கள்  நாட்டில் உருவாகும் அத்தனை பொறியாளர்களுக்கும்  industry 5.0 லெவலில் நாங்கள் engineering skil-ஐ  உருவாக்குவோம். அதற்குத் தகுந்த தரமான கல்வியை நாங்கள் அளிப்போம். அடுத்த 10 ஆண்டுகளில், நாங்கள்  100 மில்லியன் டாலர் அளவுக்கு டிரேட் பாலன்ஸ் ஜீரோ என்ற நிலைமைக்கு இந்தியாவை உருவாக்குவோம்  என்ற வாக்குறுதியை இந்திய பிரதமர், சைனா அதிபரிடம் சொல்லி கை கொடுத்திருப்பாரா என்பது  இருவரும் தருகின்ற  ஸ்டேட்மென்டில் தெரியும். 
 

முந்தைய பகுதி: 

சீனா எங்கே? இந்தியா எங்கே? தனிமைப்படுத்திய தந்திரம்!- பகுதி: #2

 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.