ADVERTISEMENT

கரோனா பீதியில் அமைச்சர்கள்!

11:32 AM Jun 24, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களில், கணிசமான நபர்களுக்கு கரோனா தொற்று பரவிய நிலையிலும், தலைமை செயலகத்தின் மீது அக்கறை காட்டாமல் இருந்தது எடப்பாடி பழனிசாமி அரசு.

மேலும், கோட்டையில் பரவும் தொற்றினை தடுக்க முயற்சிக்காமல் 60 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்களை வரவழைத்து பணி புரிய வைத்தனர். இந்த சூழலில், திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மரணம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் தாமோதரன் மரணம், எடப்பாடி பழனிசாமியின் ஆஸ்தான புகைப்படக்காரர் மோகன் மருத்துவமனையில் அனுமதி என ஏகப்பட்ட சம்பங்கள் நடந்தது.

இதனை அடுத்து அமைச்சர் கே.பி. அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி, மருத்துவமனைக்கு சென்று சி.வி சண்முகம் கரோனா பரிசோதனை என்கிற சம்பவங்களும் நடந்தன. இதில், கரோனா தொற்று சண்முகத்திற்கு இல்லை என ரிசல்ட் வந்தது. இப்படி அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் பலருக்கும் கரோனா பரவுவதாக வரும் தகவல்கள்களால்தான் அனைத்து அமைச்சர்களும் கரோனா பயத்தில் வீழ்ந்திருக்கிறார்கள்.

இதனால், முக்கியமானவர்கள் தவிர கட்சிக்காரர்கள் யாரும் தங்களை சந்திக்க அனுமதிப்பதில்லை அமைச்சர்கள். அவர்களின் கரோனா பயத்தை அறிந்து, அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனா டெஸ்டிங் செய்து கொள்ள வேண்டும் என்றும், கரோனாவை நினைத்து பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

மேலும், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள செய்யும் பல மூலிகை டிப்ஸ்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! இதனால் மிக ரகசியமாக கரோனா டெஸ்ட் எடுத்து வருகிறார்கள் அமைச்சர்கள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT