ADVERTISEMENT

கொள்ளையனாக மாறிய வங்கி ஊழியர் - பொம்மை துப்பாக்கி சொல்லும் சேதி!

12:04 PM Jul 03, 2018 | Anonymous (not verified)

மணப்பாறையில் கோவில்பட்டி சாலையில் உள்ள மெர்க்கன்டைல் வங்கியில் தினமும் கூட்டி பெருக்கும் அன்னத்தாள் கடந்த 30ம் தேதி பணம் வைக்கும் லாக்கர் அறையில் கொஞ்சம் கீழே குனிந்து சுத்தம் செய்யும் போது ஒரு பிளாஸ்டிக் கவரில் 2 பொம்மை துப்பாக்கியும் ரத்தம் என்று எழுதப்பட்ட பாட்டிலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். வங்கி மேலாளர் சிவசுப்ரமணியத்திடம் தெரிவிக்க அதிர்ச்சியடைந்த அவர் மணப்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

ADVERTISEMENT

இதன் அடிப்படையில் விசாரணையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த வங்கியில் ஓ.ஏ.வாக இருந்த மரியசெல்வம் மன்னார்குடி வங்கியில் கொள்ளையடித்து திருச்சி சிறையில் இருப்பது தெரிந்ததும் அவனிடம் விசாரணை செய்ததில்.. அவன் இங்கே ஓ.ஏ.வாக இருந்தாலும் வங்கியில் சகல இடத்திற்கும் செல்வதால் பணத்தின் மீது ஆசையில் நானும் என் நண்பர்களும் இணைந்து இந்த வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டும் இருந்தோம். அதற்கான முன் ஏற்பாடாக தான் இங்கே பொம்மை துப்பாக்கியும் இரத்த கலர் பாட்டில் இதை வைத்து கொள்ளயடிக்க முடியும் என முடிவு செய்து திட்டமிட்டபடி மறைத்து வைத்தோம்.

ADVERTISEMENT


கொள்ளையடிக்க சரியான நேரத்திற்காக காத்திருந்ததும், இங்கே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால் கொள்ளையடிக்கும் விஷயத்தை கைவிட்டோம். எனக்கு பண நெருக்கடி இருந்தால் எங்கள் வங்கியின் கிளை திருவாரூர் மாவட்ட மன்னார்குடி அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி திட்டமிட்டப்படி வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து போலீசில் மாட்டிக்கொண்டோம்.

அந்த வழக்கில் தான் தூத்துக்குடி முத்துக்குமார், மீரான்மைதீன், சுடலைமணி நாங்க சிறையில் இருக்கிறோம் என்று திருச்சி சிறையில் இருந்த மரியசெல்வம் வாக்குமூலம் கொடுத்தான். மன்னார் குடி வங்கி கொள்ளையின் போதே நாங்கள் மணப்பாறை வங்கியை கொள்ளையடிக்க நினைத்தோம் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் ஆனால் அதை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அன்னத்தாள் சுத்தம் செய்யும் போது இந்த பொம்மை துப்பாக்கிகாட்டி கொடுத்ததால் மீண்டும் மரிய செல்வத்தின் மீது பதிவு செய்திருக்கிறார்கள். மன்னார்குடி வங்கியில் கொள்ளையடித்த போது மணப்பாறை ஐய்யப்ப நகரில் உள்ள மரிய செல்வத்தின் வீட்டில் இருந்தே அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம், 2 துப்பாக்கிகள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.



வங்கியில் ஓ.ஏ.வாக இருக்கும் ஒருவர் எப்படி வங்கியில் இப்படி சுதந்திரமாக எல்லா இடங்களுக்கும் சென்றார் என்றும். இன்னும் வேறு வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்களா என்றும் இதற்கு வேறு யாரேனும் பின்புலத்தில் உள்ளார்களா என்றும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. வங்கியில் வேலை பார்க்கும் ஒருவனே கொள்ளையனாக மாறியிருப்பது வங்கி ஊழியர்கள் இடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT