திருச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதி உள்ளது சிறுகனூர் காவல்நிலையம். இங்கே நடந்த ஒரு குடும்பப் பிரச்சனையும், அதன் விசாரணையும், ஒரு நீதிமன்ற தீர்ப்பைவைத்து நடத்திய விசாரணையும் இனி திருமணம் என்பதே இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தில் கனகராஜ் 12ம் வகுப்பு வரை படித்தவர் என்றாலும் ஓட்டல் தொழிலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் சென்னையில் ஒரு ஓட்டலும் தன்னுடைய சொந்த கிராமத்தில் அப்பா அம்மாவுக்கு ஒரு ஓட்டலும் வைத்து நடத்துகிறார். கடுமையான உழைப்பு நல்ல வருமானத்தைத் கொடுத்ததால் கனகராஜிக்கு திருமணத்திற்க பெண் பார்க்க ஆரம்பித்தனர். துறையூர் அருகே உள்ள கீராம்பூர் என்கிற கிராமத்தில் இருந்து சரண்யா என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.
4 ஆண்டுகள் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை பிறந்து .இரண்டரை வயது ஆகிறது. சரண்யாவை ராணி போன்று வைத்துக்கொள்கிறார்கள். கனகராஜின் அம்மாவும், அப்பாவும்.
இந்த நிலையில் சரண்யா கனகராஜிடம் நான் பிசிஏ படிச்சிருக்கேன் மேல படிக்கணும் வேலைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு என்று கொஞ்சி கேட்க சரண்யா மீது இருந்த கட்டுக்கடங்காத பாசத்தில் அருகே உள்ள துறையூர் பகுதிக்கு படிக்க அனுப்பி வைத்தான்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திடீரென்றுஒரு நாள் நீங்க சரண்யா புருஷன் கனகராஜ் தானே என்று வந்த செல் போன் தகவல் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் சரண்யா படிக்கும் காலேஜ்ல இருந்து பேசுறேன் நீங்க சரண்யாவோட செல்போனை வாங்கிக் கொஞ்சம்பாருங்க, என்று பகீர் சொல்லி இணைப்பை துண்டித்து அந்தப் பெண் குரல். இந்தத் தகவலை கேட்டதில் இருந்து கனகராஜீக்கு கடந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனையாக இருந்தது.
வீட்டிற்கு வந்ததும் சரண்யாவின் செல்போனை புடுங்கி பார்த்தால் தன்னோட ஆசை மனைவி வேறு ஒருவனுடன் எடுக்கக் கூடாதா படங்கள் நிரம்பி கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியான ஆத்திரத்தில் சரண்யாவைஅடித்தார் கனகராஜ். சரண்யா அழுது கொண்டே நா தப்பு பண்ணிட்டேங்கே அவன் பெயர் செல்வம் எங்க ஊர்காரன் தாங்க சின்ன வயசுல இருந்தே பழக்கம். அவனைத் தான் கல்யாணம் பண்ணணும் நினைச்சேன். இரண்டு பேரும் வேற வேற ஜாதி என்பதால் அது நடக்காமலே போயிடுச்சு. எனக்கு உங்களோட திருமணம் ஆயிடுச்சு அவனுக்கு அடுத்துத் திருமணம் ஆகிடுச்சு இரண்டு குழந்தைகள் இருக்கு இப்ப தீடீர்ன்னு பார்த்தவுடன் பழைய பழக்கத்தில் தப்புப் பண்ணிட்டேன். இனிமே நான் அந்தத் தப்புப் பண்ணமாட்டேன் என்று சொல்லி கெஞ்ச அவளுடைய பேச்சில் மயங்கி சரி இனிமே ஒழுங்க இரு என்று மன்னித்தான் கனகராஜ்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஆனால் இந்தப் பிரச்சனை அடங்குவதற்குள் அடுத்தச் சில நாட்களில் சரண்யா கனகராஜ் மற்றும் அவர்கள் அம்மா அப்பா எல்லோருக்கும் குழம்பில் மயங்க மாத்திரை கலந்து இரவு நேரத்தில் சாப்பிட வைத்து இரவில் அவர்கள் மயங்கி தூங்கிய பிறகு குழந்தை எடுத்துக்கொண்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி செல்வத்துடன் துறையூர் பகுதியில் தலைமறைவானார்கள். அயந்து தூங்கி எழுந்த போது தன் மனைவி சரண்யாவும் குழந்தையும் காணவில்லை என்று தெரிந்ததும் பதறி அடித்து நாலாபுறமும் தேடி கடைசியில் என் மனைவியும், குழந்தையும் மீட்டுத் தாருங்கள் என்று சிறுகனூர் காவல்நிலையத்தில் கொண்டு போய்ப் புகார் கொடுத்துக் கதறினார் கனகராஜ்.
சிறுகனூர் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் ராஜாசெல்வத்தோட அம்மா அப்பாவை அழைத்து விசாரணையைத் துவங்கியது போலிஸ். இப்படியே நான்கு நாட்கள் ஓடிய நிலையில் தீடிர்ன்னு கனகராஜிக்குச் செல்போனில் பேசியசரண்யானவின் கள்ளக்காதலன் நாங்க இரண்டு பேரும் துறையூரில் தான் இருக்கோம். நீ அங்க வா ! சரண்யா உன்னோட வரன்ணேன்னு சொன்னாகூட்டிட்டு போ இல்லன்னு அப்படியே போயிடு என்று பேச ஆத்திரத்தை அடக்கி கொண்ட கனகராஜ் உடனே அங்கே வரேன் என்று உறவினர்கள் அழைத்துக்கொண்டு துறையூர் பேருந்து நிலையத்திற்கு அவதி அவதியாய்கனகராஜ் குடும்பத்தினர் போய் சேர.
பஸ்ஸாண்டில் போய் இறங்கியது கனகராஜ் தன் மனைவியைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். செல்வத்தின் உறவினர்கள் செல்வத்தைக் கடுமையாகத் தாக்கினார். இவர்களின் சண்டையில் பொதுமக்கள் கூட்டம் கூடியதும் எல்லோரையும் துறையூர் காவல்நிலையத்திற்கு அள்ளிக்கொண்டு போனது. தகவல் சிறுகனூர் காவல் நிலையத்திற்குச் சென்றது. இன்ஸ்பெக்டர்ராஜா அனைவரையும் அள்ளிபோட்டுக்குக் கொண்டு விசாரணையைச் சிறுகனூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணையைஆரம்பித்தார்.
கனகராஜ், என் மனைவியை ஆசையாகக் கல்யாணம் பண்ணி அவ படிக்கணும் 1 இலட்சத்துக்கு மேல் செலவு பண்ணி படிக்க வச்சேன். அவளை இந்தச் செல்வம் கூட்டிக்கிட்டு போய் எனக்குத் துரோகம் பண்ணிட்டான். அதனால் செல்வத்தின் மீதும், என் மனைவி சரண்யா மீதும்வழக்குப் பதிவு செய்யுங்கள். என் குழந்தையை எனக்குத் தாருங்கள் என்று புகார் வாசித்தார்.
உடனே இன்ஸ்பெக்டர் ராஜா இவுங்க இரண்டு பேர் மீதும் கேஸ் போடமுடியாது. அவுங்க இரண்டு பேரும் விருப்பபட்ட யார் கூட வேணா இருக்கலாம். நான் எதுவும் பண்ண முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படியிருக்கு. நா என்ன செய்ய என்று கேட்க, சரண்யாவும், செல்வமும் என்ன சொல்றாங்களோ அதைப் பொறுத்து தான் இருக்கு என்று இன்ஸ் ரமேஷ் அவர்கள் இரண்டு பேரின் முகத்தைப் பார்த்தார்.
உடனே சரண்யா எனக்குக் கனகராஜீம் வேண்டாம் அவன் குழந்தையும் வேண்டாம் நா செல்வத்தோட போறேன் என்று எழுதி கொடுத்து அங்கிருந்து கிளம்பினார். வெளியே செல்வத்தின் மனைவி இரண்டு குழந்தைகளைக் கையில் வைத்து அழுது கொண்டிருக்க, அங்கே இருந்த செல்வத்தின் அம்மா அப்பா, இவன் என்னோட புள்ளையே கிடையாது அவன் செத்து போயிட்டான். இனி எங்களோட சொத்துக்கு வாரிசு என் மருமகள் தான் அழைத்துக்கொண்டு கண்ணீரோடு சென்றனர்.
கனகராஜீன் உறவினர்கள் டேய்… கனகராஜ் அந்தப் புள்ளைய அவ கிட்ட குடுத்திடு.. உனக்கு வேற திருமணம் பண்ணிவைக்கிறேன் என்று சொல்ல கடுப்பான கனகராஜ் இவ எனக்குப் பொறந்த குழந்தை ! , இவள நானே வளர்க்கிறேன். எனக்குக் கல்யாணமே வேணாம் ! . இவ எனக்குப் பொறந்த குழந்தை என்று தோளில் போட்டுக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
சட்டங்கள் கடுமையாக்கும் போது தான் நியாயம் கிடைக்கும் என்பார்கள். ஆனாலும் அதில் உள்ள ஓட்டைகள் மூலம் பணத்தின் துணையோடு பலர் தப்பித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சட்டத்தின் சில சலுகைகள் நாம் ஆண்டாண்டு காலமாக நம்பிக்கொண்டிருந்த ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற பிம்பம் உடைந்து கொண்டிருக்கிறது என்பதைத் தான் இதைப் போன்ற சம்பவங்கள் காட்டுகிறது.