ADVERTISEMENT

"வாழ்நாளில் இதுவரை பார்க்காத ஊரடங்கை மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை.." - கரோனா பற்றி இயக்குநர் அமீர் பேச்சு!

04:49 PM Mar 27, 2020 | suthakar@nakkh…

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஊரடங்கு பற்றியும், நோயின் தாக்கம் பற்றியும் இயக்குநர் அமீரிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மக்கள் சாலைகளில் தொடர்ந்து நடமாடி வருகிறார்கள். இதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இந்த மாதிரியன ஒரு சூழ்நிலை நமக்கு புதியது. ஏன், இந்தியா சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இந்த மாதிரியான உத்தரவுகள் இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு இருக்காது. எனவே நம் அனைவருக்குமே இது புதிய அனுபவம்தான். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிக பெரிய நாடுகளே நோயின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடும் போது இந்தியா போன்ற ஒரு நாடு அப்படி பாதிப்படைந்து விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக இப்படியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவே கருத வேண்டும். எவ்வளவோ தொற்று நோய்கள் வந்திருந்தாலும், இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை தடுப்பதற்காக இந்த மாதிரியான தடை உத்தரவுகள் தேவைப்படுகின்றன.

இந்தியா போன்ற நாட்டில் அந்த மாதிரியான நோய்கள் பரவி விட்டால் அது அரசுக்கும் தொல்லை, மக்களுக்கு கஷ்டம். வாழ்நாளில் இதுவரை பார்க்காத இந்த ஊரடங்கை மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை. காஷ்மீர் மக்களுக்கோ அல்லது வட மாநில மக்களுக்கோ ஊரங்கு என்பது சாதாரண ஒன்று. ஆனால், நமக்கு இந்த ஊரடங்கு என்பது புதிய அனுபவம். மேலும் அரசு சொல்லும் உத்தரவுகள் அவர்களை பயப்பட வைக்கின்றது. ஹோட்டலுக்கு சென்றால் பார்சல் வாங்கி கொள்ளலாம், அமர்ந்து சாப்பிட கூடாது என்பதெல்லாம் அவர்களை அசைத்து பார்க்கிறது. அதனால் இதுகுறித்து ஒரு அச்ச உணர்வு இயல்பாகவே ஏற்படுகின்றது. அவர்களின் தோவையின் பொருட்டு அவர்கள் வெளியே வந்தாலும் இந்த நோய்யின் தீவிரம் என்பது அவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. ஆகையால் நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதனை தவிர்க்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT