ADVERTISEMENT

ஆவேசமாக பேசுபவர்கள் பின்னே தற்குறிக் கூட்டமாக இளைஞர்கள் செல்கிறார்கள் - ஆளூர் ஷானவாஸ்!

01:06 PM Dec 02, 2019 | suthakar@nakkh…


பாமர் மசூதி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் விசிகவை சேர்ந்த ஆளூர் ஷானவாஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " பாபர் மசூதி விவகாரத்தில் பாஜக இத்தனை ஆண்டுகாலமாக எப்படி பொய் சொல்லி வந்தது என்று தற்போது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பிலேயே பாஜகவினர் முஸ்லிம்கள் மீது சுமத்திய பழி துடைக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக கோயிலை இடித்து ராமர் கோயில் கட்டப்பட்டதாக ஒரு பொய்யான தகவலை அவர்கள் செய்து வந்தார்கள். அவ்வாறு கோயிலை இடித்து அங்கு மசூதி கட்டப்படவில்லை என்று தற்போது நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், ராமர் கோயிலை இடித்துதான் மசூதி கட்டினார்கள் என்று கூறியதால் இந்த நாட்டின் அமைதி கெட்டுபோனது. ஆனால் இன்று அவையெல்லாம் இட்டுகட்டப்பட்ட பொய்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது. பாஜக இத்தனை ஆண்டுகாலமாக சொல்லி வந்த பொய் தற்போது இல்லை என்று ஆன நிலையில், அதனை தனிமைப்படுத்த வேண்டிய அரசியல் கட்சிகள் அதனை செய்யாமல், பாஜக சொல்லி வருவதைத்தான் அவர்களும் கூறி வருகிறார்கள். ஆமாம், இது நல்ல தீர்ப்புதான் என்று சொல்கிறார்கள். இந்தியாவே மவுனமாக இருந்த போது வழக்கம் போல் அந்த மவுனத்தை உடைத்தது தமிழ்நாடுதான்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய கட்சிகளும் பாஜகவின் குரலை போன்றே அதனை வரவேற்ற போது, தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதனை கடுமையாக எதிர்த்தது. பெரியாரிய, அம்பேத்காரிய தோழர்கள் நாங்கள் என்றும் நியாயத்தின் பக்கம் நிற்போம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். அதற்காகவே இத்தகைய கூட்டங்களை அவர்கள் நடத்துகிறார்கள். பாசிசவாதிகளை எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள், போராடுகிறார்கள். ஆனால், பாஜகவினர் மக்களிடம் எதையும் செல்ல விடாமல் அவர்களை திசை திருப்புவதற்கு உரிய அனைத்து காரியத்தையும் செய்து வருகிறார்கள். இன்னொருபுறம் மாற்று அரசியல் என்று கூறி இளைஞர்களை திசை திருப்பும் முயற்சிகளை சிலர் செய்து வருகிறார்கள். தமிழ் தேசியத்தின் பெயரில் அந்த முயற்சி நடைபெற்று வருகிறது. ஒரு கூட்டம் அப்படி போகிறது, மற்றொரு கூட்டம் இப்படி செல்கிறது, இப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. நாம் பேச வேண்டியது இதைத்தான், நாம் உரையாட வேண்டியது இதைத்தான். ஆனால் நாம் அதை செய்கிறோமா என்று கேள்வி எழுகிறது. ஒன்னுமே இல்லாத விஷயங்களை பெரிதாக்கி இன்றைக்கு தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேச வேண்டிய செய்திகளை பின்னுக்கு தள்ளுகிறார்கள்.

இன்று முரசொலி பஞ்சமி நிலமா என்று விவாதத்தை எழுப்பி வருகிறார்கள், ஸ்டாலின் மிசாவில் கைதானாரா என்று பேசுகிறார்கள், இன்னொருபக்கம் ஓபிசி இடஒதுக்கீடு பற்றி யாரும் பேசவில்லை, தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று நாம் பேசிக்கொண்டிருப்பது பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது. இதுதான் இந்து மக்களுக்கான அவர்களின் வாழ்க்கைக்கு பயனளிக்கின்ற ஒரு விவாதம். இதை பற்றி யாராவது பேசுகிறார்களா? யாரும் பேசுவதில்லை. ஆனால், தேவையில்லாத பல விஷயங்களை பற்றி நிறைய செய்திகள் பரப்பப்படுகிறது. இதை எல்லாம் ஏதோ தெரியாமல் செய்யப்படுவதில்லை. திட்டமிட்டே செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக திரண்ட இளைஞர்கள் கூட்டம், ஏன் நீட் தேர்வுக்கு எதிராக திரளவில்லை. ஆவேசமாக நான்கு வார்த்தைகள் பேசுபவர்கள் பின்னே தற்குறிக் கூட்டமாக இன்றைய இளைஞர்கள் செல்வது வேதனையானது" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT